ஒரு சமூகத்தில் சிலர் அடிப்படைவாத சிந்தனையைக் கொண்டிருந்தனர் என்பதற்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண்ணுடன் நோக்குவதில் எதுவித அர்த்தமுமில்லை.


(எம்.எம்.எம். ரம்ஸீன்)  
ஒரு சமூகத்தில் சிலர் அடிப்படைவாத சிந்தனையைக் கொண்டிருந்தனர்  என்பதற்காக முழு சமூகத்தையும்
  சந்தேகக் கண்ணுடன் நோக்குவதில் எதுவித அர்த்தமுமில்லை. எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனையின் வெற்றியில் பங்காளராக மாற வேண்டும் என்று கண்டி மாவட்ட  பொதுஜன பெரமுனையின் வேட்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அழைப்பு விடுத்தார். 



உடுநுவர வெலம்பொடை நகரில் எம். ரஜப் தலைமையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,


ஐக்கிய தேசிய கட்சியில் இனவாதமற்ற சிங்கள, முஸ்லிம், தமிழ் தலைவர்கள்; இருந்தனர். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. இன்று  ஐக்கிய தேசிய கட்சி பௌத்த, முஸ்லிம், தமிழ் இனவாதங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளது. 


பதியுந்தீன் மஹ்மூந், லக்ஷ;மன் கதிர்காமர், பாக்கீர் மாக்கார்,  ஏஸீ.எஸ். ஹமீத்,  சிங்கள மரைக்கார், ஜப்பார் முதலான தலைவர்கள் சகல இனத்தவர்களதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மைத் தலைவர்களாக இருந்தனர். ஏ.ஸீ.எஸ் ஹமீதின் வெற்றி விகாரைகளில் உறுதி செய்யப்பட்டது. அவர் அடிக்கடி விகாரைகளுக்கு சென்று புரிந்துணர்வை வளர்த்துக் கொண்ட தலைவராவார். இவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றனர்.  இத்தலைவர்களை எவரும் இன ரீதியில் புறக்கணிக்கவில்லை. கடந்த 25 வருடங்களில் சிலர் அரசியல் கட்சிகளை புதிதாக உருவாக்கிக் கொண்டு இனங்களுக்கிiயில் புரிந்துணர்களை உடைத்துக் கொண்டு செயற்பட்டதால் இனங்களுக்கிடையில் சந்தேகம் வலுத்துள்ளது.  இச்சந்தேகங்கள் களையப்பட வேண்டும். 


இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை.  சஜித் பிரேமதாச சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்றவதற்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பயனைப் பெற்றுக் கொள்வதற்கும்  அராங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள். 
நான் பௌத்த, முஸ்லிம், தமிழ் இனவாதங்களுக்கெதிராக பாராளுமன்றத்தில்  குரலெழுப்பியுள்ளேன். எதிர்வரும் பாராளுமன்றம் அடிப்படைவாதிகளற்ற பாராளுமன்றமாக அமையும் என்று நம்புகின்றேன். சமூகத்தில் நூற்றுக்கு இரண்டு சதவீத அடிப்படைவாத சிந்தனையுள்ளவர்கள் காணப்படுவர். இதனால் முழு சமூகமும் சந்தேகக் கண்ணுடன் நோக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் அர்த்தமற்றதாகும். அடிப்படைவாதிகளை புறக்கணிப்போம்.


உடலில் புற்றுநோய் ஏற்படும் போது உடம்பில் புற்றுநோய் ஏற்பட்ட இடத்தை வெட்டி அகற்ற வேண்டும். அதேபோல் சமூகம் புற்றுநேர்யினால் பாதிக்கப்படும் போதும் செயற்பட வேண்டும் என்றார்.       

ஒரு சமூகத்தில் சிலர் அடிப்படைவாத சிந்தனையைக் கொண்டிருந்தனர் என்பதற்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண்ணுடன் நோக்குவதில் எதுவித அர்த்தமுமில்லை. ஒரு சமூகத்தில் சிலர் அடிப்படைவாத சிந்தனையைக் கொண்டிருந்தனர்  என்பதற்காக முழு சமூகத்தையும்  சந்தேகக் கண்ணுடன் நோக்குவதில் எதுவித அர்த்தமுமில்லை. Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.