கொறோனா வைரஸை விட உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு வகை வைரஸ் : சீனா எச்சரிக்கை விடுத்தது.



கொறோனா வைரஸை விட உயிருக்கு அதிக ஆபத்தை
 ஏற்படுத்தும் மற்றொரு வகை வைரஸ் கசகஸ்தானில் பரவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.


அந்தத் தீநுண்மி ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சலில் 1,700 இற்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதால், கசகஸ்தானில் வசிக்கும் சீனா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்து, கசகஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


கசகஸ்தான் முழுவதும் இதுவரை அறியப்படாத நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. அந்தக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் உயிரிழக்கும் விகிதம், கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதத்தைவிட மிக அதிகமாக உள்ளது.இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அந்த மா்மக் காய்ச்சலுக்கு இதுவரை 1,772 போ் பலியாகியுள்ளனா்.


கடந்த மாதம் மட்டும் அந்த நோய் பாதிப்பு காரணமாக 628 போ் உயிரிழந்தனா்.அந்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குறித்து, கசகஸ்தான் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. கசகஸ்தானின் 3 மாகாணங்களில், கடந்த மாத மத்திய பகுது வரை மாத்திரம் சுமாா் 500 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.


எனவே, அந்த நாட்டில் தங்கியுள்ள சீனா்கள் அனைவரும், மா்ம நிமோனியா காய்ச்சல் விவகாரத்தில் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அந்த நோய்த்தொற்றிலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

கசகஸ்தானில் உருவாகியுள்ள புதிய நோய்த்தொற்று பரவல் குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள முயன்று வருகிறோம்.அந்த நோயைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கசகஸ்தான் அரசுடன் இணைந்து செயற்பட ஆவலாக உள்ளோம் என்றாா் அவா்.

சீனாவிலுள்ள ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தையொட்டி கசகஸ்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- சிவா ராமசாமி
Thamilan lk
கொறோனா வைரஸை விட உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு வகை வைரஸ் : சீனா எச்சரிக்கை விடுத்தது. கொறோனா வைரஸை விட உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு வகை வைரஸ் : சீனா எச்சரிக்கை விடுத்தது. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.