புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த முஹமட் பயாஸ் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த முஹமட் பயாஸ் .


புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞரொருவர் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூரைச் சேர்ந்த முஹமட் பயாஸ் எனும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் நண்பர்களுடன் நீராடச்சென்று ஆழமான பகுதிக்கு சென்ற நிலையிலே நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவரின் ஜனாஸா புல்மோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த முஹமட் பயாஸ் . புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த முஹமட் பயாஸ் . Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5