ஜனநாயகமானதும் - நீதியானதுமான வன்முறையற்ற தூய தேர்தல் கலாச்சாரத்தைப் பேணுவோம்-


(எம்.என்.எம்.அப்ராஸ்)
எதிர்வரும் 2020 ஓகஸ்ட் மாதம் 05ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலானது
வன்முறையற்றதும் அமைதியானதும் சுதந்திரமானதும் நல்லிணக்கத்தினை உருவாக்க கூடியதுமான தேர்தலாக நடைபெற அரசியல் கட்சிகளிடமும் சுயேட்சைக் குழுக்களிடமும், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களிடமும் பின்வரும் விடயங்களில் ஒத்துழைப்பை கோருவதென சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் அனுசரணையுடன் இயங்கும் அம்பாரை மாவட்ட நல்லிணக்க மன்றம் உட்பட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை காரைதீவு, கல்முனை,கல்முனை வடக்கு,
சம்மாந்துறை, நாவிதன்வெளி, அம்பாரை மற்றும் உஹனை ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவரும் பிரதேச நல்லிணக்க குழுக்கள் தீர்மானித்துள்ளன.


அந்த வகையில் பின்வரும் செயற்பாடுகளை உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர் இதற்கமையஇனவிரிசலை ஏற்படுத்தும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைதவிர்த்தல்,ஏதிர்கால சந்ததியினரின் நல்லிணக்க நலன் கருதி அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ளல்,இளைஞர்களை அரசியலுக்காக தவறாக வழி நடத்துவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளல்,


இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக அனைவரும் இலங்கையராக ஒன்றிணைதல் போன்ற விடயங்களை பேனுமாறு இவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகமானதும் - நீதியானதுமான வன்முறையற்ற தூய தேர்தல் கலாச்சாரத்தைப் பேணுவோம்- ஜனநாயகமானதும் - நீதியானதுமான வன்முறையற்ற தூய தேர்தல் கலாச்சாரத்தைப் பேணுவோம்- Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.