தரம் உயர்வு : மூதூர் சிஹான், இலங்கை நடுவர் குழாமிற்கு நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
இலங்கை கிரிகட் சபையின் நடுவர்களுக்கான விரைவு தரமுயர்வு (Fast Track Promotion) பரீட்சை
மற்றும் நேர்முகத்தேர்வு கடந்த 2019 இறுதிப்பகுதியில் இலங்கை கிரிகட் சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

சென்ற வருட இறுதியில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பதவி உயர்வு பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் நடுவர் குழாம் ஐந்திலிருந்து நான்கிற்கு 60 பேர் கொண்ட நடுவர் குழாமிற்கு மூதூர் சிஹான் நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் கிரிகட் வரலாற்றிலே இலங்கை கிரிகட் நடுவர் குழாம் நான்கிற்கு தெரிவாகிய முதலாவது நடுவராக சிஹான் தடம் பதித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2020-07-09 ம் திகதி ஆர் பிரேமதாச (கெத்தாராம) சர்வதேச மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இவருக்கான பதிவி உயர்வு இலங்கை கிரிக்கட் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

யுபுனு சுஹூத் முஹமட் சிஹான் ஆகிய இவர் திருகோணமலை வெஸ்டர்ன் வோறியஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும், மூதூர் மத்திய கல்லூரியின் கிரிகட் பயிற்றுவிப்பாளரும், திருகோணமலை ரத்னஜோதி வித்தியார்த்தன பாடசாலையின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரும் ஆவார். இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டின் இலங்கை கிரிகட் நடுவர் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் ஆங்கில மொழி மூலம் சிறப்பான சித்திபெற்றமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் உயர்வு : மூதூர் சிஹான், இலங்கை நடுவர் குழாமிற்கு நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார். தரம்  உயர்வு : மூதூர் சிஹான், இலங்கை  நடுவர் குழாமிற்கு  நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார். Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.