குருநாகலில் இடிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்ய ரூ. 9 மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டது.


அண்மையில் குருநாகலில் இடிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டடத்தை புனர்நிர்மாணம்
செய்ய  ரூ. 9 மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடு புத்தசாசனா மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் ஆரம்ப புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு செலவாக கணிக்கப்பட்டுள்ளது.

அனு நாயக தேரோ மற்றும் பிற உயர் அதிகாரிகள், கலாச்சார விவகாரங்கள் மற்றும் தொல்லியல் துறைகளின் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த  கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்ய  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு  தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஆரம்ப செலவு மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கட்டிடத்தின் கட்டமைப்பும் வரையப்படும்.

வடமேல் மாகாண சபை, குருநாகல  நகராட்சி மன்றம், மத்திய கலாச்சார நிதியம் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து நிதி திரட்டப்படும் என்று அமைச்சு விரிவாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இடிக்கப்பட்ட கட்டிடம் குறித்த முழுமையான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

குருநாகலில் இடிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்ய ரூ. 9 மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டது. குருநாகலில் இடிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்ய  ரூ. 9 மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டது. Reviewed by Madawala News on July 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.