கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் 8 பேர் கொரோனாவினால் மரணம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் 8 பேர் கொரோனாவினால் மரணம்.


கொலை, பாலியல்  வல்லுறவு குற்றங்களுக்காக  சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை
கைதிகள் 8 பேர் கொரோனாவினால் மரணம்.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள குவென்டென் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகளான பாலியல் வல்லுறவு குற்றவாளி ஒருவரும்,  கொலைக் குற்றவாளிகள் எட்டு பேரும் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 861 கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 1,112 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட கைதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே வைத்தியசாலையொன்றில் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜோன் பீம்ஸ், ரிச்சர்ட் ஸ்டிட்லீ, ஸ்கொட் ஏர்ஸ்கின், டேவிட் றீட், மெனுவெல் அல்வாரெஸ், ட்வைன் கெறி, ஜெவ்றி ஹேகின்ஸ், ட்றோய் அஸ்முஸ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் 8 பேர் கொரோனாவினால் மரணம். கொலை, பாலியல்  வல்லுறவு குற்றங்களுக்காக  சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் 8 பேர் கொரோனாவினால் மரணம். Reviewed by Madawala News on July 27, 2020 Rating: 5