'பூ குடு கண்ணா' வின் தம்பிடின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

'பூ குடு கண்ணா' வின் தம்பிடின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றல்.


கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 3.8 ரக ரிவோல்வர் துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

25 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீடு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான பூ குடு கண்ணா என்பவரது தம்பியின் வீடு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொம்பனித்தெருவை சேர்ந்த 25 வயதான நபரே இந்த தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழிக்கும் பிரிவின் அதிகாரிகள் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.

'பூ குடு கண்ணா' வின் தம்பிடின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றல். 'பூ குடு கண்ணா' வின் தம்பிடின் வீட்டில் இருந்து  25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றல். Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5