எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து 24 மணிநேரத்திற்குள் எண்ணெணை விலையினை குறைப்பேன்..



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு
போதும் இயலாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

குருணாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை  தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போதைய ஆட்சியில் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.   தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் இயலாது.

மக்களை  முட்டாள்களாக்கும் நடவடிக்கையினையே  தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. மக்களை ஏமாற்றுகின்றனர்.மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர்.

உலகளாவிய ரீதியில் எண்ணெணை விலை குறைவடைந்துள்ளது. பல்வேறு நாடுகளும்  எண்ணெணை விலையினை குறைத்துள்ளன.ஆனால் எமது  நாட்டில் மாத்திரமே  12 மாதங்களுக்கு எண்ணெணை விலை குறைவடைய மாட்டாது என அமைச்சரவை பத்திரமூடாக  அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து 24 மணிநேரத்திற்குள் எண்ணெணை விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை  நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து 24 மணிநேரத்திற்குள் எண்ணெணை விலையினை குறைப்பேன்.. எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து 24 மணிநேரத்திற்குள் எண்ணெணை விலையினை குறைப்பேன்.. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.