கொவிட் -19 காரணமாக ஆடையணிந்தும் நிர்வாணமானவர்கள்.


                                                        ஜே.எம்.ஹாபீஸ்
இந்நாட்களில் ஆடையணிந்தும் நிர்வாணமானவர்களை அதிகம் காணமுடிகிறது
என்றால் புதுமைப்பட வேண்டாம். ஏனெனில் அது சர்வசாதாரண ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. கொவிட் -19 தொற்றே அவர்களை அப்படிச் செய்ய வைத்துள்ளது.


அதாவது இங்கு நான் ஆடை எனக் குறிப்பிடுவது இந்நாட்களில் முகத்திற்கு அணிவிக்கும் 'மாஸ்க்' என்று சொல்லப்படும் முகக் கவசத்தையாகும்.

நூறு பேரை அவதானித்தால் அதில் 60 பேருக்கு மேல் இப்படியானவர்கள்  உள்ளனர். பொலீஸ்காரன் பிடித் விடுவான் என்பதற்காக மட்டும் சம்பிரமதயமாக ஏதோ ஒன்றை அணிந் கொள்கின்றனர். சிலர் தாடிவைத்தது போல் தம் கீழ்தாடைக்கு அதனை அணிவித்துள்ளனர். இன்னும் சிலர் வாய்க்கு அணிந்து கொண்டுள்ளர்.


முகக் கவசம் என்பது சுகாதார அடிப்படையில் பயன் படும் ஒன்று. சம்பிரதாயத்துக்காக பயன் படும் ஒன்றல்ல. சம்பிரதாயத்திற்கு என்றால் எதையும் எப்படியும் செய்து கொள்ளலாம். கொரேனா என்று கூறப்படும் கொவிட்- 19 வைரஸ் சுவாசத் தொகுதியைத் தாக்குவதாக வைத்திய ஆய்கவுகள் தெரிவிக்கின்றன. அப்படியாயின் சுவாச வழியில் வைரஸ் புகாது பாதுகாக்க வேண்டுமாயின் மூக்கு வாய் இவை இரண்டிற்கும் பொதுவாக அணிந்து கொள்ள வேண்டும். தமது வாய்க்கோ அல்லது கீழ் தாடைக்கோ அதை அணிந்து பயன் இல்லை. அதனைவிட அணியாமலே இருந்து கொள்ளலாம்.


எனவே முகக் கவசம் அணிபவர்கள் தமக்கு அது தேவையில்லை என்றால் அணியாமல் இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராமல் இருங்கள். பொது இடம் எனும் போது அது மக்கள் வாழும் சமூக மாகும்.  சமூகத்தில் இருப்பது நீங்கள் மட்டும் அல்ல. எனவே மற்றவர்களது பாதுகாப்பை  உறுதிப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். 


எனவே ஆடை அணிந்தும் நிர்வாணமாகக் காட்சி அளிப்பவர்ளாக, முகக் கவசம் அணிந்தும் அணியாதவர்களாக இருக்க வேண்டாம். தயவு செய்து அதனை சரியாக அணிந்து கொள்ளுங்கள். வாய்கோ அல்லது கீழ்த் தடைக்கா அல்ல. நாசித்துவாரத்திற்கு அதை அணிவதே வைத்திய அறிவுரை.
கொவிட் -19 காரணமாக ஆடையணிந்தும் நிர்வாணமானவர்கள். கொவிட் -19 காரணமாக ஆடையணிந்தும்  நிர்வாணமானவர்கள். Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.