சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டு, 59 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டது.


சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்
ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, அபராத தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2019 மே மாதம் தொடக்கம் இவ்வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசாரணை குழு மற்றும் பொலிஸார் இணைந்து இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டு, 59 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டது. சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டு, 59 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டது. Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.