பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 1000 இலங்கை மாணவர்களுக்கு அனுமதி.


 இலங்கைக்கும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில்
பாகிஸ்தான் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுததற்கான 1000 பேருக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்;ளது.


இதன் விண்ணப்பம் திகதி மார்ச் முடிவடைந்த போதிலும் மேலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக என்று பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹமட் சாத் கத்தக் தெரிவித்தார்.


கண்டியிலுள்ள ஜின்னா ஞாபகார்த்த மண்டத்தைப் பார்வையிடுவதற்காக புதிதாக வருகை தந்துள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹமட் சாத் கத்தக் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தினால் பாரரமரிக்கப்படும் கண்டியிலுள்ள ஜின்னா ஞாபகார்த்த மண்டத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹமட் சாத் கத்தக் அவர்களை வரவேற்கும் வைபவம் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். சலீம்டீன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பாக்கிஸ்தான் நாட்டு இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், கண்டி மாவட்ட ஜம்மியல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன், கண்டி மாநகர சபையின் பிரதி முதல்வர் இலாஹி ஆப்தீன், வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. சீ, எம். ரஹ்மான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் கண்டி சித்திலெப்பை மஹா வித்தியாலயம், சுவர்ணமாலி மகளிர் கல்லூரி, ராசின் தேவ் சிங்களப் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள். கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இக்பால் அலி
பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 1000 இலங்கை மாணவர்களுக்கு அனுமதி. பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 1000  இலங்கை மாணவர்களுக்கு அனுமதி. Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.