உலகின் முதலாவது இணையம் மூலமான ( Virtual Preschool ) பாலர் பாடசாலை இலங்கையிலிருந்து.



  கோவிட் 19 தொற்றுநோயின் தோற்றம் அனைத்து பாடசாலைகளையும், அவைகளது
 அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளது, ஆகவே இந்தக் காலப்பகுதியானது ஆன்லைன் கற்றலின் முக்கியத்துவத்தையும் வசதியையும் அனைவருக்கும் வெளிப்படுத்திவருகிறது. 
   பெற்றோர்களை பொருத்தவரையில்  பிள்ளைகளின் கல்வி மிக முக்கியமாக இருந்த போதும் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது அதனை விட முக்கியமாக உள்ளது.  இதனை நிவர்த்தி செய்ய பல பாடசாலைகள் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் இணையம் மூலமான'கல்வியை அறிமுகப்படுத்தி வருகின்றன . ஆன்லைன் கற்றல் என்பது கல்வியை உங்கள் வீட்டுவாசலிற்கே கொண்டு வருவதற்கான  எளிதான மற்றும் வசதியான வழிமுறையாகும் .

இதன் முதற் கட்டமாக இலங்கையை சேர்ந்த நிறுவனமான 'Modern Learning Studio' இந்த COVID19 காலப்பகுதியின் போது குழந்தைகளுக்கு உதவுவதற்காக அவர்களுக்கேயான  சொந்த ஆன்லைன் கற்பித்தல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   இலங்கையின் முதல் (Virtual learning ) மெய்நிகர் கல்வி தளமான 'LEAMOJO '  இக் காலப்பகுதியின் போது இலங்கை மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஐக்கிய இராச்சியம் , கத்தார் , ஐக்கிய அரபு இராச்சியம் ,ஓமான் , மாலைதீவு  மற்றும் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிவருகின்றது. 

Zoom மற்றும் Skype போன்றவற்றினூடான சேனல்களின் மூலம் ஏராளமான கற்பித்தல் உதவிகள்  கிடைத்தாலும், எம்முடைய இந்தத் தளமானது  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இருதரப்பினதும் பாதுகாப்பு , அவர்களது அடையாளம் மற்றும் தனித்துவத்தினை பேணும்வகையில்  கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு வகுப்பும் கல்வி முகாமைத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டுவருகின்றது . மேலும் ஒவ்வொரு குழந்தையும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சியாளராக  தம்மை ஈடுபடுத்திக் கொள்வதையும் உறுதிசெய்கிறது. ஆசிரியர்கள் கற்பிப்பதில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாகவும் மற்றும் ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் திறனையும்  கொண்டுள்ளவர்களாகவும் விளங்குகினறனர்.மேலும், "Modern Learning Studio" போன்ற ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்துள்ள பெற்றோர்கள் அதன் செயற்பாடுகள் குறித்து  மகிழ்ச்சியாகவும், தரம் தொடர்பான உத்தரவாதத்துடனும் உள்ளனர். 

 (virtual learning )வகுப்பறையில் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கான ஒரு கண்காணிப்பு குழுவொன்றை இவ்வகுப்புக்கள் கொண்டிருப்பதால் பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளின் கற்றல் பற்றிய மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

'Leamojo' ஒரு மையப்படுத்தப்பட்ட தளமாகும், இதில் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், ஆராய்ச்சி அடிப்படையிலான கற்பித்தல் பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான  வளங்கள் என்பன வழங்கப்படுகின்றன, இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆற்றல் விருத்திக்கு ஆதரவாகப் பயன்படுத்தலாம்.

Leamojo- Guilded-Home Schooling' திட்டம், இது மற்றொரு தளமாகும், இது பெற்றோரின் தேவைக்கு ஏற்ப ,  பல்வேறு தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இது குழந்தைகளின் இலக்குகளை அடைவதற்கு, தங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான அப்போதைக்கு  தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட பாடங்களைத் தேர்ந்தெடுக்க  பெற்றோருக்கு உதவுவதுடன் பிள்ளைகள் வீட்டிலிருந்தே கல்வியை தொடர்வதற்கான அனைத்து வழிகாட்டல்களையும் இணையம் மூலம் வழங்கி வருகின்றது .

இதன் அடுத்த கட்டமாக உலகின் முதலாவது virtual preschool இனை உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் அவர்களின் ஆரம்ப கல்வியை வீட்டிலிருந்தே கற்று தரம் ஒன்றுக்கு செல்லலாம். இதன் விசேட அம்சம்  என்னவெனில் முதலில் பெற்றோர்களுக்கு விசேட பயிற்சியை வழங்கி பெற்றோரினூடாக பிள்ளைகளின் கல்வியை வழிநடத்துவதாகும்  -  'Mini Me Live' ஆனது துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின்மூலம் நடாத்தப்படுவதுடன் , அதன் உலகளாவிய மாணவர் தளத்தை விரிவுபடுத்துவதற்கான உகந்த தரத்தை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் மாணவர்களின் தனியுரிமையையும் உறுதி செய்கிறது.

'Modern Learning Studio' வின் நிறுவனர் (Yasmin mubarak), இவ்வாறு குறிப்பிடுகிறார். ."பொதுவாக மேலைத்தேய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே புதிய கண்டுபிடுப்புகளையும் அதிகமாக புது தொழில் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்  நிச்சயமாக இலங்கையை சேர்ந்தவர்களும் சளைத்தவர்களல்ல எம்மாலும் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த முடியும்  மற்றும் எமது அடுத்த இலக்கு 2022 க்குள், 2500 க்கும் மேற்பட்ட இலங்கை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் வாய்ப்புகளை வழங்குவதும் அவர்களின் மாணவர்களின் எண்ணிக்கையை உலகளவில் விரிவுபடுத்துவதுமாகும். 
'Modern Learning Studio' தற்போது நடத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும்  மாணவர்களின் எண்ணிக்கையில் பலனளிக்கும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனவே, 'Leamojo' வழியாக 'Mini Me Live' நிச்சயமாக பாலர் கல்வி முறைக்கு ஒரு புதிய கட்டத்தை மீண்டும் உருவாக்கும், மேலும் இது எதிர்கால கல்வி முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
நெல்சன் மண்டேலா , “கல்வி என்பது உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம்”,என குறிப்பிட்டார்.  ஆகவே 'Modern Learning Studio' மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களின் கனவுகளின் உச்சத்தை அடைவதற்கும் உகந்த தரமான சேவைகளை வழங்க காத்திருக்கிறது.
 
உலகின் முதலாவது இணையம் மூலமான ( Virtual Preschool ) பாலர் பாடசாலை இலங்கையிலிருந்து. உலகின் முதலாவது இணையம் மூலமான ( Virtual Preschool ) பாலர் பாடசாலை இலங்கையிலிருந்து. Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.