இந்திய இராணுவத்தினரை தோற்கடித்து வெளியேற்றவே பிரேமதாச காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்திய இராணுவத்தினரை தோற்கடித்து வெளியேற்றவே பிரேமதாச காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும்
நோக்கில், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதென, முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று (28) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக்கு வந்ததும், இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு, நாளொன்றை வழங்கியதாகவும் இந்திய இராணுவம் இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு, கிழக்குகென்று தனியான கொடியை அறிவிக்குமாறு, இந்திய இராணுவம் வரதராஜ பெருமாளுக்கு அறிவித்ததாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ, இதற்கு எதிர்ப்பை தெரிவித்து, பிரபாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தினரை தோற்கடித்து வெளியேற்றவே பிரேமதாச காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரை தோற்கடித்து வெளியேற்றவே பிரேமதாச காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5