அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய முடியாமல் போனமைக்கு கடந்த அரசாங்கத்தில் இருந்த சிலரே காரணம்



ஜனாதிபதியின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சியானது பொறுப்பு வாய்ந்த தரப்பாக செயற்படும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டன.


அந்த ஆவணங்களில் 21 ஆயிரம் ஆவணங்களுக்கு கையொப்பம்  வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தினர் தெரிவித்தனர்,அதற்கு நான்  நேரத்தை ஒதுக்கி கையொப்பமிட்டேன் ஆனால் அதன் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.


அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாருக்கு அனைத்து ஆவணங்களுடனும் கடிதங்களை அனுப்பினோம்.


இதன் போது எங்களது அரசாங்கத்தில் உள்ள சிலரே இது அரசியல் பிரச்சினை இதனுடன் தொடர்புபட வேண்டாம் என சர்வதேச பொலிஸாருக்கு கடிதம் அனுப்பினர்.


அதனை சர்வதேச பொலிஸார் தமக்கு இவ்வாறு ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றிருப்பதால் இதில் தலையிட முடியாது என அறிவித்தனர்.


அதன் பின்னர் என்னால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களடங்கிய ஜனாதிபதி  ஆணைக்குழு, அரசியலமைப்பு பேரவை,சட்டமாஅதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அதிகாரங்கள் ஆகியவற்றை தௌிவுபடுத்தி விரிவாக நாங்கள் கடிதமொன்றை அனுப்பியதன் பின்னரே சர்வதேச பொலிஸார் அதனை ஏற்றுக் கொண்டனர்.


அதன் பின்னர் அர்ஜீன் மஹேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய முடியாமல் போனமைக்கு கடந்த அரசாங்கத்தில் இருந்த சிலரே காரணம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய முடியாமல் போனமைக்கு கடந்த அரசாங்கத்தில் இருந்த சிலரே காரணம் Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.