அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன? - Madawala News Number 1 Tamil website from Srilanka

அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன?
(றியாஸ் ஆதம்)
மக்களினுடைய வறுமையினைப் பயன்படுத்தி அவர்களினுடைய வாக்குகளைப் பெறுவதற்காகப்
பொதிகளைக் கொடுப்பது பெரும் குற்றமாகும் என தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் அக்கட்சியின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் (28) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்களினுடைய வறுமையினைப் பயன்படுத்தி அவர்களினுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஆயிரம் ரூபாவினுடைய பொதிகளைக் கொடுப்பது பெரும் குற்றமாகும் அதுமாத்திரமல்ல அது சத்தியத்திற்கும் முரணானதாகும்.

மயில் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, உச்ச அதிகாரத்தில் இருந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரை வைத்துக்கொண்டு, அரசாங்கம் நாங்கள் தான் என்று, உச்சமாக ஆடிய அந்த ஆட்டத்தில் அவர்கள் இங்கு எத்தனை வாக்குகளை எடுத்தார்கள். அவர்கள் எமது மக்களின் வாக்குகளை காரணம் இல்லாமல் இல்லாதொழித்தார்கள். குறிப்பாக, அதாஉல்லாவை தோற்கடிப்பதற்காகவே அவர்கள் திட்டமிடப்பட்டு இங்கு அனுப்பப்பட்டார்கள்.

கடந்த பாராளுமன்றத்திலே முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் எத்தனை எம்.பிக்கள் இருந்தார்கள். அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன? அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டே அவர்களால் சாதிக்க முடியவில்லை. முஸ்லிம் சமூதாயத்திற்கு எதிராகவும், நாட்டினுடைய இறைமைக்கு எதிராகவும், பாராளுமன்றத்திலே எத்தனை முறை கைகளை உயர்த்தினார்கள்.

அவ்வாறு கைகளையும் உயர்த்திவிட்டு, தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து நீங்கள் உயர்த்தியதால் தான் நாங்கள் உயர்த்தினோம் என்று அவர்கள் மேசை மேல் அடித்து, விளையாடிய அந்த செல்ல விளையாட்டினையும் மக்கள் புரிந்திருப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன? அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன? Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5