முற்றுகை இடப்பட்ட வெள்ளை மாளிகை.. பங்கரில் பதுங்கிய டிரம்ப் .


கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக்காரர்கள்
வெள்ளை மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர்.

அவர்கள் அருகிலிருந்த கட்டடத்தின் ஜன்னல்களையும் கார்களை தீ வைத்து கொளுத்தியதாக வெள்ளை மாளிகையை சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை கடந்த 25ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க், கென்டக்கி, வாஷிங்டன், லாஜ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன், டெக்சாஸ், கொலம்பியா உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வலுத்தன. இந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்துவது, கடைகளை சூறையாடுவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஏராளமானோர் குவிந்ததால் அங்கு வெளிப்புற விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 6ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் உச்சமாக வெள்ளை மாளிகைக்கு அருகில் இருந்த முக்கிய கட்டடத்தின் ஜன்னல்களுக்கு தீவைத்தனர். மேலும் அங்கிருந்த கார்களை குப்புற கவிழ்த்து தீ வைத்து கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி ஒரே தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது.

இந்நிலையில்  அதிபர் டிரம்ப்  போராட்டங்களை பார்த்து பயந்து ஒளிந்து கொண்டுள்ளத்கவும்,  அவர் இப்படி ஒளிந்து கொள்வது தவறு. உடனே டிரம்ப் பங்கரில் இருந்து வெளியே வர வேண்டும். அவர் நேரடியாக சென்று போராட்டக்காரர்களிடம் பேச வேண்டும். அவர்களிடம் உரையாட வேண்டும்.பாதுகாவலர்களுக்கு பின்னால் அவர் ஒளிந்து கொள்ள கூடாது என ஹாங்காங் தெரிவித்துள்ளது.

தற்போது அங்கு வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாக சென்றனர் . ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் எல்லோரும் அங்கு வெள்ளை மாளிகை நோக்கி சென்றனர். வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் வகையில் அங்கு மக்கள் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் தேசிய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை வெளியே பெரிய அளவில் போராட்டம் வெடித்து அது கலவரமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே அங்கு பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு படையும் அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு வெளியேதான் இத்தனை கலவரங்கள், சண்டை நடந்துள்ளது. வெள்ளை மாளிகையை மொத்தமாக சுற்றி வளைக்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக தற்போது அதிபர் டிரம்ப் அங்கு வெள்ளை மாளிகை உள்ளே பதுங்கி உள்ளார். அங்கிருக்கும் பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் இப்படி பங்கரில் பதுங்குவது சாதாரண விஷயம் இல்லை

இதனால் அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டம் கைமீறி போய் உள்ளது. இப்படியே போனால் மக்கள் அங்கு வெள்ளை மாளிகையை காப்பாற்ற கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக 5 போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். 1:5 என்ற ரீதியில் போராட்டம் நடப்பதால் போலீசால் அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இது உள்நாட்டு போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.

- வன் இந்தியா -
முற்றுகை இடப்பட்ட வெள்ளை மாளிகை.. பங்கரில் பதுங்கிய டிரம்ப் . முற்றுகை இடப்பட்ட வெள்ளை மாளிகை..  பங்கரில் பதுங்கிய டிரம்ப் . Reviewed by Madawala News on June 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.