புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்பு . - Madawala News Number 1 Tamil website from Srilanka

புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்பு .


 புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து  மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்பு .

குருணாகலில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

https://divaina.com/daily/index.php/puwath-2/44676-2020-06-28-13-32-49

போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை இரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ( Narcotic officer)  ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பணம் போதைப் பொருள் விற்பனையில் பெற்றுக் கொள்ளப்பட்டதென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்திற்கு தொடர்புடைய பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் ஐவர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டுபாயில் உள்ள பிரதான தரப்பு போதை பொருள் விற்பனையாளரான கிஹான் பொன்சேகா என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹேரோயின் 90 கிலோ கிராமினை இந்த பொலிஸாரினால் திருடப்பட்டு விற்னை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்பு .  புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து  மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்பு . Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5