Akurana Pigeon Racing Societyயின் பரிசளிப்பு விழா. #புறா ரேஸ்


அக்குரணை வேக  புறா கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Northern Riders, Battle of CIK போட்டிக்கான
பரிசளிப்பு விழா நேற்றைய தினம் அக்குரணை Kings Court மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களும், கௌரவ அதிதியாக அலவாத்துகொடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ். ஏக்கநாயக்க இளங்கசிங்க அவர்களும், சிறப்பு அதிதியாக அகில இலங்கை வேகப் புறா சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம். அஜ்மீர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இப் போட்டியானது அக்குறணை, திகன, மடவலை, மாத்தளை, கலெவல, கம்பளை, வெலம்பொடை, நாவலபிடிய, மாவணலை உள்ளடங்களாக மத்திய மாகாணத்தைச் சேர்த்த சுமார் 10 கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது.
இதில்
அக்குறணையை சேர்ந்த M.T.M. Ismail (Chooty) முதலிடத்தையும், இரண்டாமிடத்தை அக்குரணையை சேர்ந்த M.S. Al Thamish அவர்களும், மூன்றாம் இடத்தை அக்குறணையை சேர்ந்த M.T.M. Ismail (Chooty) அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

இப் பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்கு மொத்தமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தகவல்: ரிமாஸ் கான் நலீர்
Akurana Pigeon Racing Societyயின் பரிசளிப்பு விழா. #புறா ரேஸ்  Akurana Pigeon Racing Societyயின் பரிசளிப்பு விழா. #புறா ரேஸ் Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.