“ ஐயோ எனது தம்பிக்கு என்ன நடந்தது”... சகோதரன் உயிரிழந்த அதிர்ச்சியில் 65 வயது சகோதரி உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

“ ஐயோ எனது தம்பிக்கு என்ன நடந்தது”... சகோதரன் உயிரிழந்த அதிர்ச்சியில் 65 வயது சகோதரி உயிரிழப்பு.


தனது இளைய சகோதரன் திடீரென இறந்த காரணத்தினால், அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி சகோதரனின்
உடலுக்கு அருகில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கேகாலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கேகாலை - பரகம்மான, எகிரியகல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஜயலத் ராலலாகே சாதி மெனிக்கே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

https://mawbima.lk/news-more/58831

உயிரிழந்த பெண்ணின் சகோதரனான கலிகமுவை தம்மல பிரதேசத்தை சேர்ந்த ஜயலத் ராலலாகே தயானந்த பண்டார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கேகாலை, அம்பன்பிட்டிய பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இவர் சுகவீனம் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக கடந்த 23 ஆம் திகதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி உடல் தம்மல பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சகோதரனின் உடலை காண அவரது மூத்த சகோதரி வீட்டுக்கு சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு சென்றிருந்த அந்த பெண், “ ஐயோ எமது தம்பிக்கு என்ன நடந்தது” எனக் கூறி கதறி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தை பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பெலிகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் பெண் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கேகாலை எகிரியகல வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
“ ஐயோ எனது தம்பிக்கு என்ன நடந்தது”... சகோதரன் உயிரிழந்த அதிர்ச்சியில் 65 வயது சகோதரி உயிரிழப்பு. “ ஐயோ எனது தம்பிக்கு என்ன நடந்தது”... சகோதரன்  உயிரிழந்த அதிர்ச்சியில்  65 வயது  சகோதரி உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5