நாளை வியாழக்கிழமை (4) மற்றும் வெள்ளிக்கிழமை நாடு முழுதுமான முழு நேரமும் ஊரடங்கு சட்ட விபரம்.


நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம்
வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

அதன்படி இன்று இரவு 10 மணிக்கு ஆரம்பமாகும் ஊரடங்கு சட்டம் சனிக்கிழமை காலை 4 மணி வரை தொடரும்.

ஜுன் 6 சனிக்கிழமை காலை  முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(  வழமைபோல்  நாடு முழுதும் ஞாயிறு தினத்தில் அமுல்படுத்தப்படும்  ஊரடங்கு சட்டம் இந்த வாரமும் அமுல் படுத்தப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை)

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளை வியாழக்கிழமை (4) மற்றும் வெள்ளிக்கிழமை நாடு முழுதுமான முழு நேரமும் ஊரடங்கு சட்ட விபரம். நாளை வியாழக்கிழமை (4) மற்றும் வெள்ளிக்கிழமை நாடு முழுதுமான முழு நேரமும் ஊரடங்கு சட்ட விபரம். Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.