பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் : 4 பேர் பலி - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் : 4 பேர் பலி


பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத
தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை பொலிஸார் வெளியேற்றிய போலீசார் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இந்த அனர்த்தத்தில்  பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்தனர்.

இதனை அடுத்து களத்தில் இறங்கிய காவல்துறையினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் : 4 பேர் பலி பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் : 4 பேர் பலி Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5