VIDEO: மும்பை அருகே தற்போது கரையை கடக்கும் நிசர்கா புயல்.. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்கம் ஏற்படும் அபாயம்.



அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல்,
இன்று (புதன்கிழமை) மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியது.

இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில், தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது மும்பையில் இருந்து 94 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும் கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தைவிட மகாராஷ்டிராதான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிசர்கா புயல் மும்பையை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மும்பை கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், முக்கியமாக பொதுஇடங்களான பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளுக்கு யாரும் வரக்கூடாது என்றும் மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
VIDEO: மும்பை அருகே தற்போது கரையை கடக்கும் நிசர்கா புயல்.. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்கம் ஏற்படும் அபாயம். VIDEO: மும்பை அருகே தற்போது கரையை கடக்கும்  நிசர்கா புயல்.. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்கம் ஏற்படும் அபாயம். Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.