Solar Minimum விளைவினால் இவ்வாண்டு பூமி குளிரப்போவது உண்மையா? ஒரு விரிவான பார்வை.



சமையலறையில் நீங்கள் எண்ணெயை (Oil) சூடாக்கும் 

போது அது வெடித்து தெறிப்பதை அவதானித்திருப்பீர்கள். புதிதாய் சமையல் பழகுவோருக்கு இருக்கின்ற பயமும் அதுதான்.

இந்த சூடான எண்ணெய் பாத்திரம் போலதான் சூரியனின் மேற்பரப்பும் கொதித்துக் கொண்டிருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் எண்ணெயின் கொதிநிலையை விட முப்பது மடங்கு வெப்பநிலையுடன்.

சூரியனின் மேற்பரப்பிலும் எண்ணை பாத்திரம் போல வெடிப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் சூரியனின் மையத்திலிருக்கும் காந்தப் பெருக்கு (Magnetic Flux).

இக்காந்த பெருக்கின் காரணமாக சூரியனின் மையத்திலிருக்கும் சக்தி அதன் மேற்பரப்பினூடாக வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு ஒரு வெடிப்பில் வெளியேற்றப்படுகின்ற சக்தி பல மில்லியன் அணு குண்டு வெடிப்புக்களுக்கு சமனானது.

இவ்வெடிப்பினால் சூரியனின் சக்தி மேற்பரப்பினூடாக தீப்பிழம்பாக சக்தி வெளியேற்றப்படுகின்றது. இத்தீம்பிழம்பு Coronal loops என‌ அழைக்கப்படும். இந்த Coronal Loops சூரியனின் மேற்பரப்பில் ஆரம்பித்து மேற்பரப்பிலேயே முடிவடையும்.

இரண்டு மின் கம்பிகள் அருகருகே கொண்டு செல்லப்படும் போது இரண்டு கம்பிகளும் தொடுகையடையாமலே இரண்டுக்கும் நடுவே ஒரு மின்சாரம் பாய்வதை பார்க்கின்றோம் அல்லவா அதுதான் இந்த Coronal Effect.

இவ்வெடிப்பின் மூலம் சூரியனிலிருந்து உருவாகும் Coronal Loops இனை சூரிய வட்டத்திலிருந்து வெளி நீட்டங்களாக அவதானிக்கலாம். சூரிய கிரகண வேளைகளில் இவை தெளிவாக தெரியும். 

Electron Microscopeயினூடாக பார்க்கும் போது இந்த Corona வடிவத்தினை ஒத்திருப்பதாலேயே இப்போது நம்மை வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் வைரஸ் Corona Virus என அழைக்கப்படுகிறது. 

இந்த Magnetic Loop இலிருந்து சூரியனின் Plasma மேற்பரப்பினூடாக சூடான வாயுவாக வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு சக்தி வெளியேற்றப்படுகையில்
அவ்விடத்தின் வெப்பநிலை 5500°C இலிருந்து அண்ணளவாக 2000°C இற்கு குறைவடைகின்றது.

இவ்வாறு வெப்பநிலை குறைவடைந்த பகுதிகளைனை நாம் அவதானிக்கும் போது அவை கரும்புள்ளிகளாக தெரிகின்றன. சாதாரனமான ஒரு கரும்புள்ளி பூமியை விட பத்து மடங்கு பெரிதானதாக இருக்கும். 

Coronal Loop இலிருந்து Plasma வெளியேறுவது Coronal Mass Ejection (CME) எனப்படுகின்றது. இதனால் சூரியனிலிருந்து வெப்பக்காற்று பரவிச் செல்லும். இதைத்தான் நாம் Solar Wind என்றழைக்கின்றோம். 

இந்த Solar Wind எல்லா கிரகங்களினுடைய காந்த சக்தியிலும், வெப்பநிலையிலும் குறிப்பிட்டளவான பாதிப்பினை செலுத்தும். ஆனால் பூமியின் வளிமண்டலம் இம்மாற்றங்களிலிருந்து இயன்றவரை பூமியை  பாதுகாக்கிறது.

சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகள் சூரியனின் செயற்பாட்டினை நமக்கு அறியத்தருகின்றன. இதனால் ஒவ்வொருநாளும் ஆய்வாளர்களால் இக்கரும்புள்ளிகள் எண்ணப்படுகின்றன. 

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக காணப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேற்றப்படுகின்ற வெப்பமும் அதிகரிக்கின்றது. இதனால் இந்தக்காலப்பகுதி Solar Maximum எனப்படுகின்றது.

சூரியனில் கரும்புள்ளிகள் குறைவாக காணப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பமும் குறைவடைகின்றது. இதனால் இக்காலப்பகுதி Solar Minimum எனப்படுகின்றது. 

Solar Minimum, Solar Maximum ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காலப்பகுதி Solar cycle எனப்படும். அண்ணளவாக இது 11 வருடங்களை கொண்டது. Solar Cycle என்பது Solar Minimumஇன் ஆரம்பத்திலிருந்து Solar Maximumஇன் முடிவு வரையான காலப்பகுதியாகும்.

2020 இல் நாம் Solar Minimum இற்குள் நுழையப் போகிறோம். 2020 ஆண்டினைப் பற்றிய அச்சம் இதனையும் பேசு பொருளாக்கியிருக்கின்றது. மீண்டும் Ice Age காலப்பகுதிக்கு நுழையப்போகிறோமா என்ற பயம் பரவ ஆரம்பித்திருக்கிறது.

கவலைப்படத் தேவையில்லை‌. இது ஒரு சாதாரண நிகழ்வுதான். இம்மாற்றத்தினை நாம் உணரப்போவதில்லை. நம்மை சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் நம்மை உணர விடுவதில்லை.

ஆனால் இம்மாற்றம் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் Satellitesகளில் சிறிது பாதிப்பினை ஏற்படுத்தும். அதேவேளை பூமியின் வளிமண்டலத்தினையும் சற்று சுருங்கச்செய்யும். 

#ஷியான்_யாக்கூப்
Solar Minimum விளைவினால் இவ்வாண்டு பூமி குளிரப்போவது உண்மையா? ஒரு விரிவான பார்வை. Solar Minimum விளைவினால் இவ்வாண்டு பூமி குளிரப்போவது உண்மையா? ஒரு விரிவான பார்வை. Reviewed by Madawala News on May 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.