இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன் M.M. சனோஜ் அகமட்



ஏ.எல்.எம்.ஷினாஸ்
இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை
நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான கண்டுபிப்பு ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட்; கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

கொரோணா தொற்றுநோயால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 03 மாதங்களுக்கு மேலாக பாடசாலைகள் இயங்கவில்லை. எனினும் இந்தக் காலப்பகுதியில் கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும் என மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட்; வீட்டிலிருந்தவாறு சிந்தித்துள்ளார்.

இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள், சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் 'சமூக இடைவெளியை பேணக்கூடிய நவீன ஸ்மாட் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்' ஒன்றை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம்.முனாஸ், யு.எல்.ஜெஸ்மினா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராவார்.

Video Download link
https://we.tl/t-OIWAVgI5qa 

ஏ.எல்.எம்.ஷினாஸ்
பிராந்திய செய்தியாளர்
அம்பாறை
இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன் M.M. சனோஜ் அகமட் இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன் M.M. சனோஜ் அகமட் Reviewed by Madawala News on May 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.