தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் நடவடிக்கை தொடர்பில் சுகாதார தரப்பினர் கடும் விமர்சனம்..



தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை
முழுமையாக நிறைவு செய்யாத  தமது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்குள் பிரவேசித்தமை தொடர்பில் சுகாதார தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்யாத தமது புதல்வியை ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு அழைத்து சென்றமை முறையற்ற விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்பாவிப் பொதுமக்கள் கூட தனிமைப்படுத்தல் ஆலோசனைகளை மதித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வரும் நிலையில் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சென்றமை நெறிமுறையற்ற விடயம் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த செயலினை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டு்ளளார்.

எவ்வாறாயினும் ரத்னஜீவன் ஹீல் மற்றும் அவரது புதல்வியின் செயற்பாட்டால் தேர்தல் ஆணைக்குழுவில் உள்ளவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்து வருவதனை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  இணை செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும்  என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பை சிலர் கருத்திற் கொள்ளாது செயற்படுவதாக வைத்தியர் நவீன் டி சொய்சா கூறுகின்றார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடாமல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குள் பிரவேசித்திருப்பது தனிமைப்படுத்தல் தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையினை கேள்விக்குட்படுத்தும் என வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டார்.

ஆகவே அவ்வாறான நிலைமையொன்று ஏற்படாமல் நடவடிக்கையெடுக்க வேண்டியது சுகாதாரத்துறை  அதிகாரிகளின் கடமையாகும் என வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் நடவடிக்கை தொடர்பில் சுகாதார தரப்பினர் கடும் விமர்சனம்.. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் நடவடிக்கை தொடர்பில் சுகாதார தரப்பினர் கடும் விமர்சனம்.. Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.