அரசின் கொரேணா ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அரசின் கொரேணா ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் பாதுகாப்பு கருதி ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று
மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.


ஓட்டமாவடி முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் தலைவர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் கல்குடா பள்ளிவாயல்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான், கிழக்கு மாகாண முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி அதிகாரி ஏ.எல்.ஜுனைட் நளிமி, வாழைச்சேனை பொலிஸார் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது மக்களின் பாதுகாப்பு கருதி செயற்பட்ட இராணுவம், பொலிஸ் மற்றும் பொதுச் சுகாதார பிரிவினரை ஊக்குவித்து பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டதுடன், மக்களின் பாதுகாப்புக்களை கருதி பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்கு வாழைச்சேனை பொலிஸாரினால் அறிவுறுத்தும் வகையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.


அத்தோடு பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கி மற்றும் வாகனத்தில் ஒலி பெருக்கி பொருத்தி இதன் மூலமாக மக்களுக்கு விழிப்பூட்டல், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பள்ளிவாயல் நிருவாகத்தினர் அரசின் கொரேணா ஒழிப்பு திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும், சட்டத்தின் மூலம் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.


இதில் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.எச்.எம்.மீராமுகைதீன், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார், ரிதிதென்னை, ஜெயந்தியாய, நாவலடி, தியாவட்டவான், மாவடிச்சேனை, பிறைந்துறைச்சேனை உட்பட ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்
அரசின் கொரேணா ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல். அரசின் கொரேணா ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல். Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5