“பேர்த் டே பார்ட்டி “ வைத்து கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

“பேர்த் டே பார்ட்டி “ வைத்து கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..திருகோணமலை, அலஸ்தோட்டம்  பகுதியிலுள்ள பிரபல விடுதியொன்றில்  பிறந்தநாள் கொண்டாடியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக,  உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தல்  சட்டத்தை மீறி பிரபல விடுதி ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய  குற்றச்சாட்டின் பேரில் பிரபல விடுதி மண்டப உரிமையாளர் மற்றும் பிறந்தநாள் கொண்டாடியவர்களை நேற்று (22) தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அவ்வலுவலகம்  தெரிவித்துள்ளது.


கடந்த 15ஆம் திகதி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின்  அனுமதி பெறாமல், ஒன்றுகூடி பிறந்தநாளை கொண்டாடிய  நபர்கள் குறித்த  விபரங்களை  திரட்டி வருவதாகவும்  சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

“பேர்த் டே பார்ட்டி “ வைத்து கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.. “பேர்த் டே பார்ட்டி “ வைத்து கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.. Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5