கடத்தல், காணாமல் போதல் பற்றி பேச முதுகெலும்பு இல்லாதோர் சற்று விலகி இருப்பது நல்லது.



ஏ.பி.எம்.அஸ்ஹர்
கடத்தல், காணாமல் போதல் பற்றி பேச முதுகெலும்பு

இல்லாதோர் சற்று விலகி இருப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.


இரவு, பட்டபகல் என்று இல்லாமல் இலக்கம் அற்ற வெள்ளை வான்களில் வந்து ஆளை துப்பாக்கி முனையில் பிடித்து போகும் கொடுமையை ஆரம்பித்து முன்னின்று நடத்தியதே 2015 வரை ஆட்சியில் இருந்த ராஜபக்ச ஆட்சிதான். 


உலக தலைநகர்களிலும் எதிரொலித்த, இது எல்லோருக்கும் தெரியும். 


அந்த நிலைமை மீண்டும் வரக்கூடாது என நாம் விரும்புகிறோம்.  


இங்கே பலருக்கு ராஜபக்ச ஆட்சியின் அலங்கோலங்களை பற்றி பேச, விவாதிக்க பயம் இருக்கின்றது. ஆகவே இன்னமும் முடிந்துபோன எமது நல்லாட்சியின் பிழைகளை கண்டு பிடிக்கவே முயல்கிறார்கள். 



இப்படியான முதுகெலும்பு இல்லாத நபர்கள் இங்கே பொதுவெளிக்குள் வர கூடாது.
இவர்களுக்கு எம் நல்லாட்சியின் வெற்றியை கூறுகிறேன். 
காணாமல் போதல் என்ற கொடுமைக்கு எதிராக போராடுவதில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. 


ஒன்று, காணாமல் போனவர்களை கண்டு பிடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது. இரண்டு, காணாமல் போதல் என்ற கொடுமையை முற்றாக இல்லாமல் செய்வது. 
குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. 


அது எம் பின்னடைவு. அதற்கும் காரணம், இப்போது இந்த அரசில் அடைக்கலம் புகுந்து இருக்கும் எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடைப்பட்ட தொடர் சண்டை.  
ஆனால், காணாமல் போதல் என்ற கொடுமையை முற்றாக இல்லாமல் செய்து, பேச்சுரிமை, எழுத்துரிமை, ஆர்ப்பாட்ட உரிமை, ஊர்வல உரிமை, கடையடைப்பு உரிமை... என்று எல்லா ஜனநாயக உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்தினோம். 


இந்த அரசியல் வரலாறு விளங்காதவர்கள் சற்று விலகி இருப்பது நல்லது.
கடத்தல், காணாமல் போதல் பற்றி பேச முதுகெலும்பு இல்லாதோர் சற்று விலகி இருப்பது நல்லது. கடத்தல், காணாமல் போதல் பற்றி பேச முதுகெலும்பு   இல்லாதோர் சற்று விலகி இருப்பது நல்லது. Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.