உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.



கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை
( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை மீறியது என இலங்கையின் சுகாதார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கைக்கு திருப்பிஅனுப்பப்பட்டவர்களில் பெருமளவானவர்கள் ஏற்கனவே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து இலங்கை திரும்பிய ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் மூவர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் எற்றுக்கொண்ட சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
குவைத் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் எந்த கட்டத்திலும் நிராகரிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை திருப்ப அனுப்புவது மனிதாபிமானமற்ற நெறிமுறைகளை மீறிய நடவடிக்கை ஆனால் இலங்கை தனது மக்களை எந்த கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளும் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது. Reviewed by Madawala News on May 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.