சவால்களின் வெற்றிக்கு: ஆளுமைகளின் அவசியம்!



எம்.எம்.ஏ.ஸமட்
ஒரு சமூகம் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் வெற்றிகொள்ள

 வேண்டுமாயின் அச்சமூகம் அரசியல் மற்றும் கல்வி ஆகிய இரு சமூகக் கூறுகளை பலமடையச் செய்ய வேண்டும். அரசியல் அதிகாரமும், கல்வி அறிவியலும் பலமடைகின்றபோது அச்சமூகத்தை நோக்கிய நெருக்குவாரங்களையும், சவாவல்களையும் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். 
மாறாக, அச்சமூகம் அரசியலிலும், கல்வி அறிவியலிலும் பலவீனமடைகின்றபோது, அச்சமூகத்தை மலினப்படுத்தவும், அச்சமூகத்தின் மீது அடிமைச் சானத்தை எழுதவும், உரிமையற்றவர்களாக வாழச் செய்யவும் அச்சமூக மக்கள் வாழும் தேசத்தின் அதிகாரத்தரப்பினருக்கும், அச்சமூக எதிர்பாலர்;களுக்கும் இலகுவானதாக ஆகிவிடும். உலகளவில் இவ்விரண்டிலும் பலவீனமடைந்த சமூகங்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருவதை அவதானிக்க முடிகிறது.



உலகளவில் சிறுபான்மையாக வாழும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்குவாரங்கள் போன்று இலங்கை வாழ் முஸ்லிம்களும் அண்மைக்காலமாக அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.; 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரான வன்முறைகள் முதல் முஸ்லிம் நபர்களின்; ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் வரை எதிர்நோக்கப்படுகின்ற நெருக்கடிகள், சவால்கள் வெற்றிகொள்ளப்பாடாமைக்கு முஸ்லிம் சமூகத்தின் சமூகக் கூறுகள் பலவீனமடைந்துள்ளமை அல்லது பலவீனமடைச் செய்யப்பட்டுள்ளமையே காரணமா? எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது..


அந்தவகையில்,  சமூகத்திற்கு எதிரான நிகழ்கால அழுத்தங்களையும், எதிர்கால சவால்களையும் வெற்றிகொள்வதற்கு அரசியல் அதிகாரமும், கல்வி அறிவியலும் பலமிக்கதாக்கப்பட வேண்டியதை காலம் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது.


 அதாவது, இவ்விருதுறைகளிலும் ஆளுமையுள்ளவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் அல்லது துறைசார் ஆளுமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துகிறது.
அந்தவகையில், மறைந்த மு.கா.வின் ஸ்தபாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நவீன முஸ்லிம் அரசியலின் ஆளுமையாகவிருந்து அரசியல் அதிகாரத்தினூடாக முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரிமின்றி பிற மதத்தவர்களுக்கும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்தது போன்றே கடந்த செவ்வாய்க்கிழமை காலமான முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சொத்தாக வர்ணிக்கப்படுகின்ற “ஜாமிஆ நளிமியா” கலாபீடத்தின் பணிப்பாhளர் மர்ஹ{ம் காலநிதி எம்.ஏ.எம். சுக்ரி முஸ்லிம் சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்காக மாத்திரமின்றி தேசிய கல்வி அபிவிருத்திக்காகவும், சமூகங்களிடையேயான சகவாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.



துறைசார் ஆளுமைகளின் இழப்புக்கள் ஈடு செய்யப்பட முடியாதவை என்பதோடு முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும,; சவால்களுக்கும் முகம்கொடுப்பதற்கு துறைசார் ஆளுமைகள் ஓரு புள்ளியில் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தவகையில் முஸ்லிம் அரசியல் சக்தி பலமடையச் செய்யப்பட வேண்டும் என்றும் துறைசார் புலமைகள் தங்களது புலமைகளை சமூகத்திற்கெதிரான சவால்களை வெற்றிக்கொள்ள பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்கள்; முன்iவைக்கப்படுகின்றன.



முஸ்லிம் அரசியலின் பலம்
இந்நாடு சுதந்திரடைந்த காலம் தொட்டு தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் இருக்க வேண்டுமென்று சிந்திக்காது பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் சில முஸ்லிம்; அரசியல்; தலைவர்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மைக்;கட்சிகளின் தலைவர்கள் கூறும் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்களது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக்கொண்டு சமூக நலன்களையும் ஒருவாறு கவனித்து வந்தனர். 



ஒரு தேசத்தின் ஒரு தனித்துவ இனத்திற்கான அரசியல் உரிமைககள் எவை என்பதையும், ஒரு அரசிடமிருந்து அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட ரீதியில் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் மக்கள் மயப்படுத்தாமல,; அவை தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஒரு சிறைப்பட்ட அரசியல் வட்டத்திற்குள் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசியல் பயணத்தை முன்நகர்த்திச் சென்றுகொண்டிருந்ததொரு  அரசியல் சூழலில்தான் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென்று, முஸ்லிம் தேசியத்துக்கென்றதொரு தனித்துவமான அரசியல் அடையாளாம் இருக்க வேண்டுமென்று அஷ்ரப் சிந்தித்தார்.


அதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் தனது ஆரம்ப இளமைப் பருத்தில் இருந்தே மேற்கொண்டார். உலகின் பல்வேறு சமூகங்களில் வாழ்ந்த  அரசியல் தலைமைகள் தங்களுடைய சமூகங்களுக்காக பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் அந்த வெற்றிகளுக்குக்காக அவர்கள் வகுத்துச் செயற்பட்ட வழிமுறைகள் பற்றியும் தேடிக் கற்றுக்கொண்ட அஷ்ரஃப், கற்றல் அனுபவத்தினூடாக செயற்படுவதற்கும், செயற்படுத்துவதற்கும்  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென்று, முஸ்லிம் தேசியத்துக்கென்று அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அந்த அடையாளத்தினூடாக முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதற்கு மக்களை ஒன்றுதிரட்டவும் தனது வாழ்நாளின் முக்கிய யுகங்களை அர்ப்பணித்தார்.  



அதற்கான எதிர்கால செயற்றிட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்.  அத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என அர்ப்பணிப்புடனும், தூர நோக்குடனும் சிந்தித்துச் செயற்பட்டதன் விளைவாக அஷ்ரபினால் 1981ஆம் ஆண்டு காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை ஆரம்பித்த அஷ்ரப் 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம் தேசியத்துக்கான தனித்துவ அரசியல் அடையாளத் உறுதிப்படுத்தினார். இந்த அரசியல் அடையாளம் தற்போது விமர்சிக்கப்பட்டாலும் அன்றைய சூழல் இந்த அடையாளத்தின் தேவைப்பாட்டை உணர்த்தி நின்றது என்பதை மறுப்பதற்கில்லை. 


அஷ்ரப் எனும் ஆளுமையின் முன்னாள் அரசியல், சமூக எதிரிகளின் பல சவால்கள் தோல்வி கண்டன.
தனது பேச்சாற்றலினாலும், மொழிப் புலமையினாலும், ஜனரஞ்சக வாழ்க்கை முறைமையினாலும,; பாகுபாடற்ற சமூகப்  பார்வையினாலும் வெகுவாக வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட அஷ்ரப், 1987ஆம் ஆண்டு நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தேர்தல் களத்தில் இறக்கி, அதில் கனிசமான ஆசனங்களை வெற்றிகொண்டு வடகிழக்கு மாகாண சபையில் பலமுள்ள எதிர்கட்சியாக கட்சியைத் திகழச் செய்தார்.



அதைத்தொடர்ந்து 1989, 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மாகாண சபை மற்றும் ஏனைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் கட்சியைக் களத்தில் இறக்கி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பலத்தை  மக்கள் சக்தியுடன் பறைசாட்டியதன் விளைவாக ஆட்சிக்குப் பங்காளியாக இருந்து, அதிகாரங்களை உரிமையோடு பெற்று முஸ்லிம் தேசியத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை அரசியல் பலத்தின் மூலம் மேலும் நிரூபித்துக்காட்டினார்.



இத்தனைக்கும் அவர் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்கள் என்றதொரு வரையறைக்குள் மக்களை ஒன்றிணைத்து சிறுபான்மை சமூகம் தமது அரசியல் தனித்துவமிக்க வாக்குப்பலத்தினால் தமக்குரிய அரசியல் உரிமைகளைப் பெற முடியும் என்பதைப் புடம்போட்டார். அவர் பெற்றெடுத்த அந்த உரிமைகளின் அடையாளங்கள் இன்னும் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதொன்றுதான் தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும்.
அவரின் அரசியல் ஆளுமை அதிகாரப்பலத்தினூடாக உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இப்பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தது மாத்திரமின்றி, அரசியல் பலத்தின் வலிமையை முறையாகக் பயன்படுத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகவுள்ளது. 
ஆனால், அவரின் மரணத்தின் பின்னரான காலங்களில் வந்த அரசியல் தலைமைகளினால் அவரின் அரசியல் வியுகங்களையும், அனுபவங்களையும் பின்பற்றி சமூகத்திற்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், அரசியல் அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தவும், சவால்களை இராஜதந்திர ரீதியாக கையாளவும் முடியாமல்; போய்யுள்ளதை கடந்த இரு தசாப்தமாகக் காண முடிகிறது. இன்று இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு பிரதான காரணம் முஸ்லிம் அரசியல் பலவீனமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுவதையும் மறுப்பதற்கில்லை.



இந்த இரு தாசப்த காலத்தில் பல்வேறு சவால்களை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய போதிலும் சமூகத்தின் அரசியல் பிரமுவர்களும், துறைசார் புலமையாளர்களும் அச்சவால்களை வெற்றிகொள்ள ஒரு புள்ளியில் இணைந்து செயற்பட முயற்சிக்கவில்லை. சுயநலங்களினதும், சமூக அக்கறையில் காணப்பட்ட அலட்சியமும், பதவி மோகங்களும்  இணைவுக்கு தடைக்கற்களாக் காணப்பட்டதையும். இன்றும் காணப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.


இச்சந்தர்ப்பத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளாதாக குறிப்பிடப்படுகின்றபோதிலும் நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 1000யைத் கடந்து விட்டது. இந்நிலையில் ஜுன் 20ஆம் திகதி நடைபெறுமென திகதி குறிக்கப்பட்ட 9வது பாராளுமன்றத் தேர்தல் அத்திகதியில் நடைபெறுவதில் சாத்தியமில்லை என்பது இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 



22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த ஏறக்குறைய ஒரு கோடி 63 இலட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையை எதிர்வரும் இத்தேர்தலில் வழங்கவுள்ளனர். இதனிடையே, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிராம மட்ட மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் கொரோனா பீதிக்குள்ளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவே அறிய முடிகிறது. கடந்த காலங்களில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பயன்படுத்த மூலதனமாகக் கருதப்படும்,  இனவாதம், மதவாதம் என்பவற்றோடு ‘கொரோனாவாதமும்’ புதிதாக இணைக்கப்பட்டு வாக்கு பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோத்பாய ராஜபக்ஷவுக்கு ஏறக்குறைய 69 இலட்சம் வாக்குகளை அளித்து அமோக வெற்றிபெறச் செய்தது போன்று, இந்த வாக்கு மூலதனங்கள் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க வழிகோலுமா என்ற கேள்வி தற்போது எழ ஆரம்பித்திருக்கிறது என்பதை விட அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே உணர முடிகிறது. 


2020இல் உருவாக்கப்படும்; பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகமாக இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகக் காணப்பட்டாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அதைத் சாத்தியப்படுத்துவார்களா? 


மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியான 
விடயமாகும்.
ஏனெனில், பொரும்பான்மைக் கட்சிகளிலும், தனித்துவ கட்சிகள் ஊடாகவும் முஸ்லிம் வேட்பாளர்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளனர். இந்நிலையில், போட்டியிடுபவர்களிடையே சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களையும், துறைசார் ஆளுமையுள்ளவர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள் என்ற நம்பிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில், முஸ்லிம் சமூகம் பொருளாதாரத்தில் மாத்திரமின்றி கல்வித்துறையிலும் விருத்தியடைய வேண்டும். 


அதற்கு சமூகத்திலுள்ள கல்விப் புலமையாளர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகவுள்ளது.  முஸ்லிம் சமூகத்தில் பல கல்விப் புலமையாளர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த வழிகாட்டல்களையும், பங்களிப்புக்களையும் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். 
இருப்பினும், சிலர் புலமையாளர்களாக வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்களால் சமூகம் பெரிதளவில் நன்மையடையவில்லை. 


இச்சூழலில், அண்மையில் இறையடியெய்திய ‘ஜாமியா நளீமியா’ கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி மர்ஹ{ம் எம்.ஏ.எம். சுக்ரி முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஓர் பன்முக ஆளுமையாகப் பிரகாசித்திருக்கிறார். 


முஸ்லிம்; சமூகத்திலிருந்து மாத்திரமல்ல பிற சமூகத்திலிருந்தும் பல ஆளுமைகள் உருவாக கால்கோலியுள்ளார். அத்தோடு தன்னாள் முடிந்த சமூக வகிபாகத்தை மண்ணறையை அடையும் வரை நிறைவேற்றியுள்ளார் என்பதை அவரின் மரணம் தொடர்பில் வெளிவந்த அனுதாப பேச்சுக்களும், அறிக்கைகளும் புலப்படுத்துகின்றன. 
“ நான் ஒரு எழுத்தாளராகவும், புலமையாளாராகவும் உருவாவதற்கு கலாநிதி சுக்ரி என்ற ஆளுமையின் செல்வாக்கு மிகவும் உதவி புரிந்தது” என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி ரோஹித தஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதன் மூலமும், “மர்ஹ{ம் நளீம் ஹாஜியார்  உருவாக்கிய ஜாமிஆ நளீமியாவில் பணியாற்றி இந்நாட்டுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி இந்த சமூகத்திற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்க  கலாநிதி சுக்ரி  பங்களிப்புச் செய்துள்ளார்” என போராசிரியர் மௌனகுருவினால் வெளியிடப்பட்டுள் அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மூலமும் மர்ஹ{ம் கலாநிதி சுக்ரியின் சமூக பகிபாகம் முஸ்லிம் சமூகத்தினால் நினைவில் நிறுத்த வேண்டியவைகளாகும்.
முஸ்லிம்களும் கல்வி விருத்தியும்
அரசியலையும் கல்வி அறிவியலையும்  சமாந்திரமாகக் கட்டியெழுப்ப வேண்டும், அரசியல் ஆளுமைகளும். 



துறைசார் ஆளுமைகளும் ஓர் புள்ளியில் சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டும என்ற சமூகத்தின் எதிர்பாhக்குக்குள் முஸ்லிம்களின் அரசியலையும், கல்விப் புலத்தையும் பலமடையச் செய்ய வேண்டும் என முஸ்லிம் சமூகத்திற்குள்ளிலிருந்து சிந்தித்தவர்களில் மர்ஹ{ம் அஷ்ரபைப் போன்று கலாநிதி சுக்ரியும் ஒருவராவார்.
மு.கா.வின் ஸ்தாபகர் மர்ஹ{ம் அஷ்ரப் முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த, முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை ஒரு கொடியின் கீழ் ஒன்று சேர்க்க, அதன் மூலம் அரசியல் உரிமைகளைப் பெற எத்தகைய தியாகங்களைப் செய்தாரோ, அவ்வாறு கல்வி அறிவியலுக்கான விழிப்புணர்வை முஸ்லிம் சமூத்தில் ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம் சமூகத்திலிருந்து கல்வியாளர்களை, துறைசார்ந்தோரை உருவாக்கவும் கொடைவள்ளல் மர்ஹ{ம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து மர்ஹ{ம் கலாநிதி சுக்ரியும் செயற்பட்டார் என்பதை முஸ்லிம் கல்விப் புலம் நன்கு அறியும்.
பேருவளை ‘ஜாமிஆ நளிமியா’ எனும் கல்விப் பீடத்தின் ஸ்தபாகர் மர்ஹ{ம் நளீம் ஹாஜியார் முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செய்த தியாகங்கள் அளப்பெரியவை. 


ஆதனால்தான், அவர் மறைந்தும் மக்கள் மத்தியில், முஸ்லிம் கல்விப் பரப்பில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். 
ஜாமிஆ நளீமியா ;கல்விப் பீடத்தில் கற்று நாடளாவிய ரீதியில் மாத்திரமின்றி உலளாவிய ரீதியிலும் பலர்; உயர் பதவி வகிக்கிறார்கள். இதற்குக் காரணகத்தாவாகவும், இலங்கை முஸ்லிம்களின் கல்வித் தந்தையாகவும் கருதப்படுபவரே கொடைவள்ளல் மர்ஹ{ம் நளீம் ஹாஜியார்..
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும்  மறக்கப்படுகின்றது. ஆனால், ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக் காலம் சிலர் தோன்றுகிறார்கள். அவர்;கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்களன்று. சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணமானவர்கள், தங்களது தனிப்பட்ட வாழ்வு என்ற நதியை சமூகம் என்ற சமூகத்திரத்தில் சங்கமிக்கச் செய்தவர்கள், சமூக மேம்பாட்டையும் நல்வாழ்வையும் தங்களது இலட்சியமாக வரித்துக் கொண்டவர்கள். இத்தகையவர்களின் வாழ்வும் அதன் நிகழ்வுகளும் சமூக வரலாற்றோடு இரண்டறக் கலந்து அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிடுகின்றன. 
அத்தகையவர்களின் வாழ்க்கையினூடே நாம் கால சமூகத்தைத் தரிசிக்கின்றோம், அதன் வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்களை இனங்கண்டு கொள்கின்றோம். தனி மனிதர்களின் வராலாறுகள், வாழ்க்கை நிகழ்வுகள், அவர்கள் சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் நிச்சயம் பாதுகாக்கப்பட்டு  எதிர்கால சந்ததியினருக்கு பாத்தியதையாக வழங்கப்பட வேண்டும். அந்தகைய ஒரு தனி மனிதரின் வரலாறே நளீம் ஹாஜியாரின் வரலாறு என ‘நளீம் ஹாஜியாhரின் வாழும் பணியும்;’ எனும் தனது நூலின் முன்னுரையில் ஜாமியா நளிமீயாவின் பணிபாளராக பதவி வகித்த மர்ஹ{ம் கலாநிதி சுக்ரி குறிப்பிட்டிருக்கிறார்.
நளீம் ஹாஜியார் பற்றிய கலாநிதி சுக்ரி; எழுதி வரிகள் அவருக்கும்; பொருந்துவதாகவே உள்ளமை அவரது வழ்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகள் தொடர்பில் அவர் மறைந்ததன் பின்னர் அவர் பற்றி வரையப்படும் வரிகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பட்டுக்காக மர்ஹ{ம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து  இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை  கலாநிதி சுக்ரி உருவாக்கினார். மறுமலாச்சி இயக்கத்தின் விளைவாக ஜாமியா நளிமீயாவோடு  இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரியும் உருவாகியது. இக்கல்லூரியின் உருவாக்கத்திலும் இவரின் பகிபங்கு அளப்பெரியது, முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமன்றி தேசிய கல்வித்துறையின்  மேம்பாட்டுக்காகவும் மரணிக்கும் வரை தனது பங்களிப்பை வழங்கியுள்ளளார். 


அதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி பாடநூல்கள், கலைத்திட்ட வரைபில் இவர் ஆற்றிய பங்கு பெறுமதி வாய்ந்தாhகக் கருதப்படுகிறது. தனது கல்விப் புலமையினால் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பல்வேறு பங்களிப்பைச் செய்து மறைந்துள்ள கலாநிதி சுக்ரி என்ற வரலாற்று புருஷரை நாளை இலங்கை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவு கூறும.; 
“கலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும் அவருடய பாரத்திற்கு தங்கத்தை மறுதட்டிலும்  வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் வேண்டப்பட்டால்  கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன்” என கொழும்பு ஸாகிரா கல்லூரின்  அதிபர் பதவியைப் பொறுப்பேற்க கலாநிதி சுக்ரியை ஜாமிஆவில்  இருந்து  விடுவிக்குமாறு நளீம் ஹாஜியாரிடம் வேண்டப்பட்டபோது அவர் இவ்வாறு  கூறியதாக  ஜாமிஆ நளிமீயாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெயக் ஏ.ஸீ அகார் முகம்மத் எழுதிய கலாநிதி சுக்ரியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய “கலாநிதி சுக்ரி – ஒரு பன்முக ஆளுமை” என்ற நூலில் குறிப்பிட’டுள்ளதை கோடிட்டுக்காட்ட வேண்டும்.
ஒரு சமூகத்தின் கல்விக்கு உயிர் ஊட்டியவர்கள் அவர்கள் மறைந்தும் வாழ்வார்கள், என்றும் ஞாபகமூட்டப்படுவார்கள் என்பதற்கும் மர்ஹ{ம்களான ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகர் நளீம் ஹாஜியார் மற்றும் அதன் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி ஆகியோர் என்றும் சான்றாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.



எந்தவொரு சமூகத்திலும் ஆளுமையுள்ளவர்கள் தானாக உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் அல்லது சூழ்நிலைக் காரணிகள் ஆளுமைகளை உருவாக்கிறது. அந்தவகையில், முஸ்லிம் சமூகத்திலும் பல்வேறு துறைசார் வல்லுனர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரே தனது ஆளுமைகளையும், புலமைகளையும் சமூகத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியலினதும், கல்வி அறிவியலினதும் பலம்  முஸ்லிம் சமூகத்தின் சவால்களை வெற்றிகொள்ள உதவும் என்ற அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் ஆளுமையுள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் தெரிவு செய்யப்படுவது அசியமாகவுள்ளது போன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து ஆளுமையுள்ள துறைசார் வல்லுனர்கள் உருவாகுவது அல்லது உருவாக்கப்படுவது அவசியமாகவுள்ளது. 
அதனடிப்படையில், அரசியல் பலமும் துறைசார் வல்லுனர்களிள் அறிவியல் ஆற்றல், சிந்தனைகளும் ஒரு புள்ளியில் ஒன்றிணைவதன் ஊடாக மாத்திரமே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நிகழ்கால நெருக்கடிகளையும், எதிர்கால சவால்களையும் வெற்றி கொள்ள முடியும். இதற்கான முயற்சி இந்த ‘கொவிட்-19’ நோய் தொற்று கற்றுத்தந்த பாடங்களின்; அடிப்படையில் முயற்சிக்கப்பட வேண்டும். 


தவறும்பட்சத்தில் முஸ்லிம்களை நோக்கிய நெருக்கடிகளும், சவால்களும் தொடர்கதையாகவே அமையுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

சவால்களின் வெற்றிக்கு: ஆளுமைகளின் அவசியம்! சவால்களின் வெற்றிக்கு: ஆளுமைகளின் அவசியம்! Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.