பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுங்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுங்கள்.பாறுக் ஷிஹான்
பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும்

 ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுமாறு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை(23) முற்பகல் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் மேலும் தனது கருத்தில்

எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாங்கள் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இன்றுவரை நாங்கள் இந்த கொவிட் 19 உரிய கட்டுப்பாட்டை இலங்கையில் மிகவும் சிறப்பாக செய்து அதை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் அந்த விதத்தில் நாங்கள் விடயங்களை உடைத்து விடுபவர்களாக இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் ஊடாக உறுதிமொழியை தந்திருக்கின்றார்கள் ரமழான் கால ஒன்றுகூடலை தவிப்பதாக அத்துடன் பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை நிச்சயமாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் இருப்பார்கள் தொற்று நோய் பரவக்கூடிய ஏதுவாக வர்கள் இருப்பார்கள் ஆகவே நிச்சயமாக இந்த ஒன்றுகூடலில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை சுகாதாரத்துறையினர் நாம் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் பொலிஸாரும் அவரது நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றார்.

பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுங்கள். பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுங்கள். Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5