பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்புஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (22) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5