ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம்ராஜபக்க்ஷக்களின் ஆட்சிக் காலங்களில் மக்களுக்கான எந்தவித சலுகை பொதிகளும் பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியமில்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,


ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறுமாதகாலம் கடந்துள்ள நிலையில் அவர்கள் வழங்குவதாக குறிப்பிட்ட இந்த சலுகை பொதிகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.


தற்போது மக்கள் பணத்தை அரசாங்கத்துக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் பெரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களது பாதுகாப்புக்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.?


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியசாலைக் குழுவினர் மூன்று அல்லது நான்கு பேர் ஒரே அறையில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம் ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம் Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5