இன்றைய நெருக்கடிக்கு மத்தியில் தனியார் / பாடசாலைகளிற்கான கட்டணங்கள்.



தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்
 என்ற கோரிக்கை ஒரு சில பெற்றோர்களினால் பல மட்டங்களில் அழுத்தம் கொடுக்கப்பட்டதை இதில் சம்பந்தப்பட்டவர்கள் அறிவர்.


இது சம்பந்தமாக கல்வி அமைச்சர் திரு. டலஸ் அலகப்பெரும கருத்துத் தெரிவிக்கையில் “ தனியார் பாடசாலைகளின் கட்டணத்தை முழுமையாக அறவிடப்படுவதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்”. 
அத்துடன் இது சம்மந்தமாக  மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” இரண்டாம் தவணைக்கான கட்டணம் தொடர்பாக சலுகை வழங்குமாறு எமக்கு  கூற முடியுமே தவிர  இது சம்பந்தமாக தனியார் பாடசலைகளிற்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.


தனியார் பாடசாலைகளை பொறுத்தளவில் அதன் பெரும்பாலான செலவுகள் அப்படியே காணப்படுகின்றன. 


அதில் குறிப்பாக  ஆசிரியர்கள் மற்றும் ,அனைத்து ஊழியர்களிற்குமான மாதாந்த சம்பளத்தை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. 


மேலும் ஏனைய செலவுகலும் அவ்வாறே காணப்படுகிறது. 
மேலும்  நாட்டில் காணப்படும் தனியார் பாடசாலைகள் online ஊடாக மாணவர் களிற்கான கல்வி நடவடிக்கைகளை தன்னால் முடிந்தவரை செய்து கொண்டிருப்பதை அறியக்கூடியதாயுள்ளது.



தற்போதைய நிலையில் பெற்றோர்களில் அதிகமானோர் கட்டணங்களை பூரணமாக வழங்காததுடன் அவர்களில் சிலர்  கட்டணங்களில் சிறு பகுதியை ஆயினும் செலுத்தாமலிருப்பதை அறிய முடிகின்றது. 
ஆயினும் தற்போதைய நெருக்கடியை கருத்தில்கொண்டு  பல தனியார் பாடசாலைகளில் தமது இரண்டாம் தவணைக்கான கட்டணங்களில் சலுகைகள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


A.A.M. ஜாஸில்,
தலைவர்,
இலங்கை சர்தேச பாடசாலைகளிற்கான அமைப்பு.

இன்றைய நெருக்கடிக்கு மத்தியில் தனியார் / பாடசாலைகளிற்கான கட்டணங்கள். இன்றைய நெருக்கடிக்கு மத்தியில் தனியார் / பாடசாலைகளிற்கான கட்டணங்கள். Reviewed by Madawala News on May 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.