மாளிகாவத்தை நிவாரணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாளிகாவத்தை நிவாரணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைதுமாளிகாவத்தை பகுதியில் மூன்று பேர் உயிரிழப்பிற்கு காரணமான நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட ஆறு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நிவாரணம் வழங்கலின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்ததோடு 4 பேர் காயமடைந்துள்ளனர். 


இதனைத்தொடர்ந்து குறித்த நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நிவாரணம் வழங்கும் செயற்பாடானது மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


மாளிகாவத்தை நிவாரணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது மாளிகாவத்தை நிவாரணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5