இலங்கையில் கொவிட் 19 கட்டுப்பாட்டிற்குள் உள்ளது ! தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையில் கொவிட் 19 கட்டுப்பாட்டிற்குள் உள்ளது ! தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்..இலங்கையில் கொவிட் 19 கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் ! தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க கடிதம் மூலம் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் சில்வா உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.


ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அங்கு ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொவிட் 19 கட்டுப்பாட்டிற்குள் உள்ளது ! தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.. இலங்கையில் கொவிட் 19 கட்டுப்பாட்டிற்குள் உள்ளது ! தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.. Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5