இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடத்திய இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுய தனிமைப்படுத்த லுக்கு உள்ளாக்க பட்டனர்.



கொரோனா தொற்று வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்துப்
பாடசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தலவாக்கலை பகுதியில் இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடத்திய இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் இன்று (20) சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.


மேலதிக வகுப்பு நடத்தப்பட்ட வகுப்பறையையும் பொதுச் சுகதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளதாக தலவாக் கலை லிந்துளை நகரசபையின் தலைவர் அசோக சேபால தெரிவித்தார்.


தலவாக்கலை – லிந்துளை நகர சபைக்கு உட்பட்ட தலவாக் கலை பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமுக இடைவெளி மற்றும் சுகதார முறைகளை கடைப்பிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு நடத்தி வந்தமை தொடர்பில் தலவாக்கலை லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகக்கலை லிந்துளை நகர சபைக்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதனையடுத்து, இது தொடர்பில் தலவாக்கலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாக்கலை பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களும் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு ஆசிரியர்களும் குறித்த வகுப்புகளை நடத்துவதற்கு தலவாக்கலை லிந்துளை நகர சபையில் அனுமதி பெற்றுள்ள போதிலும் கொரோனா தொற்று ஏற்பட்மையினால் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளை நடத்த அரசாங்கத்தினால் தடைசெய்யபட்டது.


மேலும் சுகாதார அமைச்சின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடனே மேலதிக வகுப்புகளையோ பாடசாலைகளையோ நடத்த முடியும்.


எனவே, அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களை மீறி மேலதி வகுப்புகளை நடத்தியமையினாலும் சுகாதார முறைகளை மேற்கொள்ளாமையினாலுமே இவர்கள் சுயதனிமைப் படுத்தபட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடத்திய இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுய தனிமைப்படுத்த லுக்கு உள்ளாக்க பட்டனர். இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடத்திய இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுய தனிமைப்படுத்த லுக்கு உள்ளாக்க பட்டனர். Reviewed by Madawala News on May 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.