பாகிஸ்தானில் சுமார் 107 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது! அனைவரும் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாகிஸ்தானில் சுமார் 107 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது! அனைவரும் உயிரிழப்பு.பாகிஸ்தானில் சுமார் 107 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் இருந்து கராச்சி நோக்கி பயணித்த விமானத்தில் 85 பயணிகள் உள்பட சுமார் 107 பேர் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சி அருகே, மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Airbus A320 என்ற விமானமே தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் சுமார் 107 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது! அனைவரும் உயிரிழப்பு. பாகிஸ்தானில் சுமார்  107  பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது! அனைவரும் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5