முன்னாள் M.P காதர் மஸ்தான் தனிமைப் படுத்தப்பட்டார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா
 தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டாரென அறியமுடிந்தது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

புத்தளத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் கடந்த 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தின் மரண வீடொன்றுக்கு சென்றதாகவும் அவர் அங்கு வந்திருந்த முன்னாள் எம் பி மஸ்தான் மற்றும் இதர பலருடன் நீண்ட நேரம் உரையாடியிருந்தமையும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புத்தளத்தில் கண்டறியப்பட்டவர் இந்தோனேசியா சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி மன்னார் தாராபுரம் கிராமத்திற்கு மக்கள் சென்றுவருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் M.P காதர் மஸ்தான் தனிமைப் படுத்தப்பட்டார். முன்னாள் M.P காதர் மஸ்தான்  தனிமைப் படுத்தப்பட்டார். Reviewed by Madawala News on April 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.