கொரோனா வைரஸுக்கு சவாலாக நாட்டில் பொருளாதார வைரஸ் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது..



ஊடகவியலாளர்:- *ஏ.சி. எம் பௌசுல் அலிம்*
கொரோனா வைரஸுக்கு சவாலாக நாட்டில் பொருளாதார வைரஸ் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு இருப்பதாகவும்  இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க  அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். நாட்டில் உள்ள வங்கிகளில் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை உருவாக்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று அரசாங்கத்துக்கு விடுத்த வேண்டுகோளின் அவர் இந்த விடயங்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அண்மைக் காலமாக நாங்கள் எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமான நிலையை எட்டி இருப்பதால் அதிலிருந்து வெற்றி கொள்வதற்கு  பிரயத்தனங்களை எடுத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எனவும் என்றாலும்கூட நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளை அவசர தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா  வைரஸ் தாக்கம் முழு உலகையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும்  இன்றைய சூழ்நிலையிலும் கூட சர்வதேசம் எனது நாட்டை அனுதாபப் பார்வை கொண்டு நோக்குவது ஒரு வகையில் ஆறுதல் தருவதாகவே உள்ளது.

 தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருக்கும் கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு போதிய வருமானம் இன்றி முடங்கியிருப்பதனால் நாளாந்த செயற்பாடுகளைக் கூட முன்னெடுக்க முடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் அவை உரிய முறையில் அந்த மக்களை சென்றடைவதை காண முடியாத நிலையை எம்மால் அவதானிக்க முடிகிறது.  இப்படியான சூழ்நிலையில் நாட்டில் ஒரு பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்கான ஏதாவது ஒரு வழியை நான் பின்பற்ற வேண்டிய  அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் இன்று கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் எமது நாடும் அதற்குள் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கக்கூடிய     விஷயமாகும். 

 இன்று எதிர்கொள்ளும் நிலைமை நாளை இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளைய நிலைமையை கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட வேண்டிய  அவசரம் இன்று ஏற்பட்டிருக்கின்கிறது. 
 
 அதனால் சில முக்கியமான விஷயங்களை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் இன்று நாம் எதிர் கொண்டிருப்பது ஒரு சுகாதார நெருக்கடி நிலை  என்றாலும் கூட இதனால் அடுத்த சில தினங்களில் முழு உலகமும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கக் கூடிய சூழ்நிலையை தெரிகிறது. கடந்த சில தினங்களாக நாங்கள் அவதானிக்கின்ற போது பொருளாதார ரீதியில் தாக்குப்பிடிக்க முடியாத பல நாடுகளை காணக்கூடியதாக உள்ளது.  பொருட்களை வாங்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு பொருளாதார வசதி சிறிதளவும் காணப்படவில்லை அன்றாடம் தொழில் புரியும் மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை கூட சில தனியார் நிறுவனங்கள்  வழங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
 
 இதிலிருந்து நாங்கள் முழு அளவில் பொருளாதார ரீதியில் விடுபட வேண்டுமாக இருந்தால் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. நாளைய நிலைமையை கருத்தில் கொண்டு சில அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கின்றது. 
 
அரசாங்கத்தின் மீது மட்டும் குறியாக இதை சுட்டிக் காட்ட விரும்பவில்லை. நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தான் இதற்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.  இந்த விடயத்தில் நாம் முரண்பட்டுக்  செய்யப்பட  முடியாது.  ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் எப்படி இந்த சவாலை வெற்றி கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பொருளாதார ரீதியில் வங்கி நடைமுறைகள் தவறானது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். 

என்றாலும் கூட இன்றைய நிலையில் அந்த வங்கிகளின் செயல்பாடுகள் அவர்களுடைய அந்த கையாளுகை மக்களை இலகுவாக தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு வசதியானதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். மக்கள் இதனை முழுமையாக என்று எதிர்பார்க்கின்றனர போதும்கூட சரியான முறையில் சென்றடைய வில்லை என்ற குறைபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு மாற்று தீர்வு ஒன்றை காண வேண்டிய அவசியம் என்று தேவைப்பட்டுள்ளது. 
  
ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதன் மூலமே நாட்டில் ஒரு இயல்பு நிலையை உருவாக்க முடியும்.  இன்று நாடு முற்றுமுழுதாக  இயல்பு நிலையிலிருந்து விடுபட்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.  காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.  நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உரிய காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இதனை தனித்து அரசாங்கத்தால் எடுக்க முடியாது என்பதையும் நானறிவேன்.  மக்களும் நாமும் ஒன்றுபட்டு பொறுமையுடன் இந்த விடயத்தை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 நாடு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசாங்கத்தின் வரி வருமான ஆதாயம் வீழ்ச்சி கண்டுள்ளது.  இதன் காரணமாக  அரசாங்கத்தின் வருமானம் 50 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. எமது வெளிநாட்டு கடன் பெரும்பாலாக  வெளிநாட்டு கடன் தனியார் துறையில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது.   அவர்களிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

முழு உலகமும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டிருப்பதால்  உதவிகளை பெற்றுக் கொள்வது கஷ்டமானதாகவே நான் நோக்குகிறேன். மறுபுறத்தில் மக்களின் பொருளாதாரம் குறித்தும் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசை மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியதாரர்கள் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் கொடுப்பனவுகளை அவர்களுக்கு இந்த மாதத்துக்குரிய அந்த உதவிகளை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கூட கேள்விக்குறியாக உள்ளது.  என்றாலும் கூட  தனியார்துறை ஊழியர்களும் அந்த நிறுவனங்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுக் கொள்வது கூட இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.   இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டு எமது பொருளாதாரம் தொடர்பில் சில விடயங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அரசாங்கத்திற்கு கிடைப்பது ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஆகும். அந்த வருமானங்களை கூட உரிய முறையில் பெற்றுக் கொள்வது ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே காலத்துக்குப் பொருத்தமான ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சர்வதேச நாணய நிதியம் அதன் அறிக்கையை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வெளியிட இருக்கின்றது. இதன்போது நாம் அவர்களிடமிருந்து கூடுமான அளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நான் இவற்றை உங்களுக்கு சுட்டிக் காட்டுகின்றேன் ஒரு ஆரோக்கியமான திட்டத்தை நாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மத்திய வங்கியால்  வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை  போதுமானதாக இல்லை என்பதனால் ஆகும். எனவே எமது பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் நாட்டு மக்களுக்கு எமது நிலைமையை எடுத்துக் கூறி அதற்கேற்ற வகையில் எமது இந்த திட்டத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் ஓரளவுக்கேனும் ஒரு திருப்தி அளிக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும். 

கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டிருக்கும் எமது மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு  ஏற்படக்கூடிய ஆரோக்கியமற்ற சூழ் நிலையை நாங்கள் கவனத்தில் கொண்டு பொறுப்புடன்  செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
கொரோனா வைரஸுக்கு சவாலாக நாட்டில் பொருளாதார வைரஸ் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.. கொரோனா வைரஸுக்கு சவாலாக நாட்டில் பொருளாதார வைரஸ் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.. Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.