சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு; சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு! - Madawala News Number 1 Tamil website from Srilanka

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு; சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக
எதிர்வரும் 7ம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்துள்ளார்.

இதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான வேலையிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  1,049 பேருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறுவோர் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது S$10,000 அபராதம் விதிக்கப்படும் என முன்னர் பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு; சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு! சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு; சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு! Reviewed by Madawala News on April 04, 2020 Rating: 5