காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!


                                                                  காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.


காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பள்ளிவாசலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது. 

பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

  (காங்கேயனோடை நிருபர்) மெட்ரோ
காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு! காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு! Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.