பஞ்ச காலத்தை எதிர் கொள்வதிலும் கவனமற்ற சமூகமாக!....

பஞ்ச காலத்தை எதிர் கொள்ள பரவலாக அனைத்து மக்களும்
 தத்தமது வீட்டுத் தோட்டங்களை தயார் படுத்த முன் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.


எமது மக்களை பொருத்தவரையில் ஒருவர் ஒரு விடயத்தை செய்தால் அதை அப்படியே கண்மூடி பின்பற்றுவதை அனைத்து விடயங்களிலும் சாதாரணமாக காண முடியும்.


வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைக்காக தயாராகியுள்ள எம் சமூகம் இங்கேயும் ஒரு தவறு விடுவதை காண முடிகிறது. அதாவது வீட்டுத் தோட்டங்களில் பயிர் செய்கை செய்வதற்காக முன் வந்துள்ள அனேகமானவர்கள் மறக்கறி வகைகளை நடுவதை தீர்மானித்து செயல் படுவதை அவதானிக்க முடிகிறது.

இப்படியானவர்கள் மறக்கறி என்பது எமது வயிற்றுப் பசியை போக்கும் அடிப்படை உணவல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் மறக்கறி நடுகை செய்யாதீர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அனைவருமே மறக்கறி நடுவதில் பயனில்லை என்பதையே கூற வருகிறேன்.

எந்த ஒரு பொருளும் தேவைக்கு அதிகமாகி விட்டால் அப்பொருளை கஷ்டப் பட்டுதான் உற்பத்தி செய்திருப்பினும்; தேவைக்கு அதிகமானதை வீசுவதை தவிர வேறு வழியில்லை. குறித்த ஒரு மறக்கறியின் விலை அதிகரித்தால் அனைவரும் அந்த மறக்கறியை நடுவதும், பின்னர் குறித்த பொருளின் விளைச்சல் அதிகரிப்பால் பிரயோசனமின்றி மலிந்த விலையில் விற்பதும், எஞ்சியவைகளை குழி தோண்டிப் புதைப்பதும் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இநநிலைக்கு காரணம் தேவையை உணர்வதைவிட! பிறர் செயலில் கவரப் படுவதேயாகும்.

பஞ்ச நிலை ஏற்படும் பட்சத்தில் எமக்கு அவசியமாகும் பல்வகையான உணவுகளும் விளைச்சலில் இருக்க வேண்டும். அப்போதுதான் பண்டமாற்று முறைகளில் எம் தேவைகளை எமக்கு ஓரளவுக்கேனும் சமாளித்துக் கொள்ள முடியுமான வாய்ப்பு ஏற்படும்.

பொதுவாக நகர் பகுதிகளில் வாழக் கூடியவர்களுக்கு வீட்டுத் தோட்டங்கள் மிகக் குறைவு. அவர்கள் தங்களது வீடுகளில் ஓரமாக கிடைக்கும் சிறிய பகுதிகளையும், பெல்கனிகளையுமே பயிர் செய்கைக்காக பயன் படுத்துவர். இது போன்றவர்கள் மறக்கறி போன்ற சிறு பயிர் வகைகளை தெரிவு செய்வதை தவிர வேறு வழியில்லை.

ஆனால்! கிராமங்களில் வாழ்வோர் தமது தேவை குறித்து மாத்திரம் சிந்திக்காமல் பொது நலத்துடன் பயிர் செய்கைகளை முறைப் படுத்த வேண்டிய அவசியமுள்ளது. இது அவர்களது பொருப்புமாகும்.

> கிராமப் புறங்களில் உள்ளவர்கள் மரவள்ளி, வற்றாளை, பப்பாசி போன்றவைகளை தோட்டங்களில் நடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
> வயல்களை பயன் படுத்த வாய்ப்பு உள்ளவர்கள் நெல் பயிரிடுவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
> தோட்டங்களின் உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் உள்ள மரங்களை கவனிப்பாரற்று இருந்திருப்பீர்கள். குறிப்பாக பலா, தென்னை போன்ற மரங்களின் நிலமைகள் குறித்து கவனத்தில் எடுக்க வேண்டும். மரங்களுக்கு அடியில் மண்களைக் கூட்டி பசளையிடுவது உற்பட தேவையான பராமரிப்புகளை செய்வது கொண்டு விளைச்சலை அதிகப் படுத்த வேண்டும்.

அக்காலத்தில் நபிகளாரின் பள்ளிவாயல் நிர்வாகம் சமூகத்துக்கு தேவையான பல்முனை திட்டங்களையும் அமுல்படுத்தியதை வரலாறு அழகாக எடுத்துக் கூறுகின்றது. இக்காலத்தில் உள்ள நிர்வாகிகளிடம் சுய உற்பத்தி, களஞ்சியப் படுத்தல் போன்றவற்றை நடைமுறைப் படுத்துங்கள் என்று எடுத்துக் கூறினாலும் காது கேளாதவர்கள்போல் நடந்து கொள்வது இக்காலத்தின் துர்ப்பாக்கியமே.

சமூகத்தை வழிநடாத்த கடமைப் பட்டுள்ள படித்த சமூகமும், வெறுமனே வீடுகளுக்குள் அடைப்பட்டு ஊடகங்களோடு தம் வாழ்வை சுறுக்கிக் கொண்டுள்ளனர்.

 செல்வந்தர்களும் தமது குடும்ப வாழ்வுக்கான தயாரிப்புகளுடன் தம்மை சுறுக்கிக் கொண்டுள்ளனர். 

அனேகமான தனவந்தர்கள் தற்போதைய நிலமையை சமாளிக்குமுகமாக உலர் உணவு போன்ற ஏதேனும் உதவிகளுக்காக முன் வருகிறார்களேயன்றி! எதிர்காலம் குறித்த கண்ணோட்டத்தில் களஞ்சியத் தயார் படுத்தலுக்கான சமயோசிதம் கொண்டவர்களாக செயலாற்றுவதை காண முடியவில்லை.

பொது மக்களும் ஏதாவது ஒரு வழியில் நமக்கு ஓசியில் ஏதாவது கிடைக்க வேண்டும் என்ற மனப் பாங்கில் சோம்பேரிகளாக இருக்கிறார்களேயன்றி! நம்மிடமுள்ள பணத்தை, நகையை கொண்டு தம் குடும்பத்துக்கும் தம் சூழலுக்கும் தேவையான தானியங்களை தயார் படுத்திக் கொள்ள இன்னும் முன்வரவில்லை.

சமூகத்தின் முதுகெலும்புகளாக வர்ணிக்கப் படும் இளைஞர்களும் சமூக வலைத் தளங்களில் வீணாக கழிக்கும் நேரத்தை சமூகத்துக்காக தோட்டங்களில் கழிக்க இன்னும் முன் வரவில்லை.

குடும்பத் தலைவிகளும் வீண் விரயங்களை தவிர்த்து, வாழ்வை சிக்கனப் படுத்தி எஞ்சியவைகளைக் கொண்டு சுற்றுப் புறத்தில் வாழ்வோரை வாழ வைப்போம் என்று சிந்தித்ததாக இன்னும் காண முடியவில்லை.

இந்நிலையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உணவில்லா நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டால் பொறுப்புதாரிகள் யாவாரும் குற்றவாளிகளே. ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ற பொறுப்பாளர்களே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 "எச் சமூகமும் தம் நிலையை தாமாக மாற்றிக் கொள்ளாதவரை அவர்களது நிலையை அல்லாஹ் மாற்றுவதில்லை"(அல் குர்ஆன்...). எமது பொடுபோக்கால் எம் துன்பத்தை நாமே தேடிக் கொண்டு படைத்தவனை குறை கூறுவதில் பாவம் எழுதப் படுவதன்றி எப்பயனும் இருக்கப் போவதில்லை.

எனவே காலம் உண்ர்த்தும் நிலமையை உணர்வோமாக. அதற்கேற்ப எம்மால் முடிந்த செயற் திட்டங்களை வரைவோமாக. சுயநலமின்றி மக்களுக்காக வாழ்வோமாக.

அபூ ஸுமையா. மடவளை
09-04-2020
பஞ்ச காலத்தை எதிர் கொள்வதிலும் கவனமற்ற சமூகமாக!.... பஞ்ச காலத்தை எதிர் கொள்வதிலும் கவனமற்ற சமூகமாக!.... Reviewed by Madawala News on April 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.