சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை தப்பிய கைதிகள் (ஹெரோயின் குற்றவாளிகள்) மூவரும் சிக்கினர்.


இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலையின் சுவரை குடைந்து தப்பிச்சென்ற
ஹெரோயின் குற்றவாளிகள் மூன்றுபேர் மீண்டும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்படும் கைதிகள் அனைவரும் 14 நாட்கள் பிரத்தியேக அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோன வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதன் பின்பே சிறை அறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

அப்படியான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களே சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை 12.10மணியளவில் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் இரண்டு கைதிகள் சிறைச்சாலை அருகில் உள்ள மைதானத்தில் ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கைதி நீர்கொழும்பு கடோல்கெலே பகுதியில் அவரது வீட்டில் ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யபட்ட கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை தப்பிய கைதிகள் (ஹெரோயின் குற்றவாளிகள்) மூவரும் சிக்கினர். சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை தப்பிய கைதிகள் (ஹெரோயின் குற்றவாளிகள்)  மூவரும் சிக்கினர். Reviewed by Madawala News on April 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.