கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நல்லூர் பிரதேச சபை அமர்வில் அஞ்சலி.


(தி.சோபிதன்)
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த மக்களுக்கு நல்லூர் 
பிரதேச சபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக நல்லூர் பிரதேச சபையின் சிறப்பு அமர்வு இன்று கூடியது.நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.


இந்த அமர்வின் ஆரம்பத்தில் சபையின் தவிசாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த வர்களுக்கு 2 நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.


இந்த கலந்துரையாடலின் போது, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு அமர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டிருந்தனர்.


நல்லூர் பிரதேச சபையின் இந்த அமர்வு அனைத்து மக்களையும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நல்லூர் பிரதேச சபை அமர்வில் அஞ்சலி. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு  நல்லூர்  பிரதேச சபை அமர்வில்  அஞ்சலி. Reviewed by Madawala News on April 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.