பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கலாம் ; ஜனாதிபதி அனுமதி


பிரான்ஸில் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரொன் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் மொஹமட் மௌஸாயி, இது தொடர்பில் ஜனாதிபதி மெக்ரோனுக்கு எழுதிய கடிதத்தில், சில பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை நிலவுவதால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியாதுள்ளமை குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். 


இதற்கு பதிலளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, இதற்காக அருகிலுள்ள வேறு பொருத்தமான இடத்தை ஒதுக்கித் தர முடியும் எனவும் முஸ்லிம்கள் அவர்களது சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கலாம் ; ஜனாதிபதி அனுமதி பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கலாம் ; ஜனாதிபதி அனுமதி Reviewed by Madawala News on April 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.