பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு உட்பட பல சிக்கன நடைமுறைகள் அமுலுக்கு வருகிறது.


செலவுச் சிக்கன நடைமுறைகளை அமுலாக்குவதாக ஸ்ரீலங்கன் 
எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன் கீழ், பணியாளர்களுக்கான சம்பள வெட்டும் அடங்கும். 


எதிர்வரும் மூன்று மாதங்களில் சம்பளக் கொடுப்பனவுகளை இரண்டரை முதல் 25 சதவீதம் குறைத்து, சம்பள அதிகரிப்புகளை இடைநிறுத்தும் யோசனைகள் அமுலாக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


நிறுவனத்தின் பணிப்பாளர் சபையானது நாட்டின் பொருளாதாரம் குறித்தும், பணியாளர்களின் வாழ்வதாரம் குறித்தும் கவனம் செலுத்தி, இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு உட்பட பல சிக்கன நடைமுறைகள் அமுலுக்கு வருகிறது. பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு உட்பட பல சிக்கன நடைமுறைகள் அமுலுக்கு வருகிறது. Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.