திருகோணமலை மாவட்டத்தில் கூலித் தொழில் செய்பவர்களுக்கு கிண்ணியா தனவந்தர் எம். எஸ். உவைஸினால் உதவிகள்.

(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் திருகோணமலை 
மாவட்டத்தில் கூலித் தொழில் செய்பவர்களுக்கு கிண்ணியா தனவந்தர் எம். எஸ். உவைஸ் உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபைக்கு அவரது சொந்த பணத்திலிருந்து 110000/= நிதியுதவி வழங்கி வைத்தார்.

இந்நிலையில் அதிகளவில் வறுமையில் வாழும் மூதூர் கிழக்கு பிரதேச மக்களுக்காகவும், மொரவெவ பிரதேசத்தில் வறுமையில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் இரவு நேர சாப்பாட்டையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிணி தாய்மார்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நேரங்களில் அவசரமாக வைத்தியசாலைக்கு செல்லவும், வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்கும் தனவந்தர் எம். எஸ். உவைஸினால் போக்குவரத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அவசரமாக வைத்தியசாலை செல்வோர் இருந்தால் 0760163586 மற்றும் 0760164878 போன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் சமூக சேவகரும்,தனவந்தருமான எம். எஸ். உவைஸ் திருகோணமலை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
திருகோணமலை மாவட்டத்தில் கூலித் தொழில் செய்பவர்களுக்கு கிண்ணியா தனவந்தர் எம். எஸ். உவைஸினால் உதவிகள். திருகோணமலை மாவட்டத்தில் கூலித் தொழில் செய்பவர்களுக்கு கிண்ணியா தனவந்தர் எம். எஸ். உவைஸினால் உதவிகள். Reviewed by Madawala News on April 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.