கொரோனா வைரஸை ஒழிக்கும் கடமையில் ஈடுபட்டு இருந்த சுகாதார ஆய்வாளர் மீது கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்குதல்.


ரம்புக்கன காவல் பிரிவில் உள்ள பத்தாம்பிட்டி பகுதியில் கொரோனா வைரஸை ஒழிக்கும்  கடமையில்
ஈடுபட்டு  இருந்த ரம்புக்கன பொது சுகாதார அலுவலக  பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் 
 கூர்மையான ஆயுதம் ஒன்றால்  தாக்கபட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாரியின் கடமைக்கு குறுக்காக செயல்பட்டது மற்றும்  கூர்மையான பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது  தொடர்பான விசாரணைகளை ரம்புக்கன காவல்துறை தொடங்கி உள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதார ஆய்வாளர் ரம்புக்கன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காட்டுப் பகுதியில் மறைந்து உள்ளார்  என்ற தகவலின் பேரில் காவல்துறையினர் தேடுதல்  நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிக்கு  எதிராக கடுமையான  சட்டம்  அமல்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸை ஒழிக்கும் கடமையில் ஈடுபட்டு இருந்த சுகாதார ஆய்வாளர் மீது கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்குதல். கொரோனா வைரஸை ஒழிக்கும்  கடமையில் ஈடுபட்டு  இருந்த  சுகாதார ஆய்வாளர்  மீது  கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்குதல். Reviewed by Madawala News on April 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.